Offerings at the feet of Sai

NOTES


CREDIT: Many of the uploads here are from SP Archives..Sincere thanks to UPLOADERS AT SP ARCHIVES...

Disclaimer

These short audio clips are provided here only in the hope of enticing more audience for Carnatic music. Not to have any commercial advantage. venkatakailasam

'E'-SWARA


E'-SWARA is mainly for music downloads. The intent is to spread the musical

message of great Composers and Artists so as to reach as many listeners as possible.
They are provided here for educational purposes and for your listening pleasure. Please respect the rights of the artists and do not copy or reproduce these in any manner for commercial purposes.

Even though prominence is given to south Indian Carnatic music, there is no

disliking to other forms of music.

Music is divine

in whatever form it is .

WE NEITHER TAKE DONATIONS NOR CONTRIBUTIONS.

ADVERTISEMENTS NOT RESORTED TO

Care is taken not to include commercial clips as the rights of owners are

respected. However, any slip in this regard may be intimated to me by E Mail to

enable removal of same.

It is again requested not to use the downloads for commercial purpose.

In spite of this disclaimer if anybody resorted to this, it is at their own risk.

This Blog has plenty of songs to hear and watch

and a large number of materials to read about to keep one engaged fully.


Venkatakailasam@gmail.com




My Compositions

 All the songs are my creations and have been copyrighted..Do not copy
04 Apr 2012 18:10
Image
This is what I prayed to Him in my dream sometime back.....

naal paren vidhi paren thithi paren
nin padamalar thuthedum adiyenai , sireyenai
Azithedum naal endro?
En iraivane murugane
Pazni padhiyane
senthil andavane
Velava, Myil vahana, Kozhi kodi udai nathane
Arupadaiveedu konda Arumugava.
 09 Apr 2012 22:15
Image

நீ பார்ப்பது என் குணத்தை
நீ கேட்பது அடியவர்களின் கோஷத்தை
நீ உவகை கொள்வது ஜெபிக்கும் உன் நாமத்தை
நீ விரும்பவது அடியவர்களுக்கு ஆற்றும் தொண்டை
நீ ஈவது களங்கமற்ற மனதை
நிதியை நாடவில்லை விதியை தீர்த்து
பிறவா வரமும் மறவா வரமும் அருள்வாய்
என் மனமும் குணமும் பண்புற்றிருக்க
அருள் புரிவாய் செந்தில் நாதனே
 10 Apr 2012 19:38
Image

பன்னிரு கையன்னுக்கு உகந்த மங்கையர் இருவர்
நற்றவன் நான்கு கையனுக்கு
ஆயிரம் ஆயிரம் கோபியர்
இது நியாயாமா ?
திருடனாய் பிறந்தாய் , திருடனாய் வளர்ந்தாய்
ஆ வினை ஓட்டினை ஆயர்பாடியை கலக்கினை
முலையை திருகி மாய்தனை
உருண்டாய்,உதைத்தாய் ,பிளந்தாய், ஆடினாய், பாடினாய்
மிதித்து கொடியவனை வீழ்தினை
கவர்ந்துபோய் மணந்தாய்
கொடியவர் நூறுவரை ஒடக்க நீ சென்ற பாதை சரியா ?
பார்த்தனுக்கு சாரதியானாய்
கவிபாடா அவனுக்கு உபதேசித்தாய் !
விழ்ந்தவனை முள்ளின்மேல் அமர்த்தி உன் நாமத்தை இயம்ப வைத்தாய்
இது நியாயமா ?

தந்தைக்கு பிரணவம் உரைத்தான் ...
ஜ்யோதி ஸ்வரூப வேலினை தங்கைஆய் பெற்றான்
சூரனை வெல்ல ……
தோற்றவனை மாயக்கவில்லை வேலவன்
அணைத்து தனதாக்கி கொண்டான்
பீலியாய் கொடியாய்!!
உபதேசித்தான் கவிபாடும் வல்லமை எய்திய
முத்தான அருணகிரிக்கும் ....
சித்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரு மருந்தானான்
உற்றவர் சுற்றவர் சூழ மணம் புரிந்தான்

அஷ்டபதியரும் விட்டலனும் கவி வேங்கட்டவனும்
இவன் புகழ் படாமல் அவன் புகழ் பாடியது ஏனோ ?
இது ஞாயமா ?
இவனும் அவனும் ஒன்றே என்பதை அறியா அறிவிலியாய்
இருபது ஏனோ ??
 12 Apr 2012 22:28
Image


பாராமுகம் ஏனம்மா
க்ருஷ்ண பத்தினியே !
எத்தனை நாமங்கள் உனக்கு !
வசுதா என்று கூவினால் சுகத்தை அளிப்பாய் தரணியில் ..
சுச்சி என்றால் தருவாய் களங்கமில்லா மனதை...
சுதா என்றால் அம்ருதத்தை அளிப்பாய் ..
ஒளியை ஈவதற்கு ஓடி வருவாய் விபா என்றவுடன் ..
நான் என்றும் நினைப்பது உன் நாமம் ..
கேட்பது திருவை..
வேண்டுவது உன் பதம் ..
காண்பது உன் அருட் கோலம்
சரணம் அடைந்தேன் தாயே ...
 13 Apr 2012 07:15
Image

MOUNA NADHAM!
O Music! hast thou only heard
The laughing river,
The gushing waters,
The rustling leaves,
The singing bird,
The murmuring wind
All Nothing but Nature's melodies! But, not
The silent Music?
True it is, Stillness has much
More melody!
 13 Apr 2012 21:19
Image


வெண்ணிறமும்
மதி அலங்கார முடியும்
திருநீறும் ருத்ர ஹராமும்
அரைகசித்த புலித்தோலும்
அபயகரமும் பாசாங்குசமும்
அரியும்சிவனும் ஒன்றென்று உரைக்க
சக்தி நின்ற இடது பக்கத்தை
பட்டு பீதாம்பரமும் குண்டலமும் சங்கும்
வெண்மணி முத்துமாலையும்
ஆராதித்து ஆட்கொண்டவா ...ஹரியே ..
ஈசன் தன்னுடன் உன்னையும் இணைத்து
தேவிக்கு ஈந்த தரிசனமாகி நின்றாய் ...
சங்கர நாரயாணனாய்!!
 14 Apr 2012 20:02
Image


வழி காட்டும் தெய்வமே தாயே அபிராமி
வெள்ளத்தை கடந்து வெளியினில் நின்று கூவினேன்
கதறினேன் நெஞ்சம் உருகி கண்ணீர் மல்கினேன் ...
கனவில் வந்தாய் ...தனயனிடம் கேள் என்றாய்
அவன் திருவடியே சரணம் என விழ்ய்ந்தேன்
அடிவாரம் சுற்றவில்லை காவடி தூக்கவில்லை
குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்
பட்டதை நாடவில்லை சித்தத்தை தூய்மையாக்க நவின்றேன்
நிதியை பதவியை பதக்கத்தை வேண்டவில்லை
தேவையை குறைத்து சேவையை வேண்டி நின்றேன்
அவன்னுகுகன்த தேனும் தினையும் பால் கதலியும் ஈந்தேன்
குமரா என்று கூவினேன் வருவான் என நின்றேன் !!!
 16 Apr 2012 11:40
Image

Samayapurathu Mariamman

தேடி வந்தேன் அருள்புரிவாய் முத்துமாரி
சரண் என வந்தேன் முத்துமாரி
வாடினேன் பாடினேன் நாடினேன் முத்துமாரி
பக்தியுடன் துதித்தேன் முத்துமாரி
வினை தீர்த்து அருள்வாய் சமயபுரத்து முத்துமாரி
வேர்காட்டு தாயே கண்ணன் சோதரியே உமையே மாரியே
மந்திர ஒலியே குறை தீர்பவளே சங்கரன் துணைவியே
வேம்பின் நாயகியே உடுக்கையும் சூலமும் ஏந்தியவளே
முத்தும் நெம்பும் ஹாரமாய் அணிந்த நாயகியே
வெண்நீறும் குண்டலமும் கொண்டவளே
வேப்பிலை ஏந்தி கரகம் ஆடி வரும் அடியவர்களை காத்திடும் மாரியே
கண்ணபுரத்து கண்மணியே !
துணை வேண்டி நின்றேன் முத்துமரியாம்மா
ரட்சித்திடு சங்கரியே பரமேஸ்வரியே!!!
 16 Apr 2012 18:12
Image


பனித்த களங்கமில்லா வெண் பிறை சூடிய தேவியே
மாதுளம் பூ நிற முகத்தினில் திரு வெண்ணீறு அணிந்து
சுடலை பூசிய பெம்மான் இட பாகம் நின்றவளே ..அபிராமியே
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் நின்ற இளையவனும்
அவனுக்கு உதவிய மூத்தவனும் ஆக நால்வருமாய் விடை ஏறி
உகந்து வந்து காத்து அருளவேண்டும்
 17 Apr 2012 20:42
Image



அகரமுதல் ஒவ் வரை ஈராறு உயிராய் குமரனை விழித்தல்:

அகர முதலாகி அங்கை மென்குழலால் மைந்தனே
ஆறுதல் அளித்து காக்க வேண்டும் என் ஈசா..
இயில் இசை பேர்இன்ப கடலில் முழ்கி
ஈரமுடன் நெஞ்சில் நாத கீதம் ஒலிக்க
உள்ளம் மகிந்து உவந்து உன்னிடம் உரிமையுடன் விழய்ந்து
ஊனே நானென்று அவலமாய் நினைத்து
எதிரில்லாத அன்பை பகைவரிடமும் காட்டிட
ஏகமுமாகி பலவுமாகி அனுபூதியுமாகி
ஐங்கரனின் துணைவா!
ஒரு பொழுதும் நின் திருவடிகளை மறவாது
ஓது முத்தமிழில் நின் புகழ் பாடி உள்ளம் நிறைய …
ஒவுடதமாகி என் துயர் தீர்ப்பாய் ..
மயில் ஏறும் மன்னவா இரு மங்கையருக்கு உகந்த குமார..
 19 Apr 2012 07:51
Image

விழிகளை குளந்களாக்கி வேண்டி நின்றேன் !
வழி காட்டிய இறைவனே
தடைகளை நீக்கினாய்
முதல்வனாய் நின்றாய்
எல்லாம் அறிந்தவன் ஆனாய்
மறை ஓதும் மறையவனே
இமவான்னுக்கு பேரன் ஆனாய்
இளையவனுக்கு மூத்தவனும் ஆனாய்
மாதவனுக்கு மருகனானாய்
அடியவர்களுக்கு ஆப்தனானானை
கைத்தலத்தில் நின்ற வாரண குருவே
கவலைகளை நீக்கிய மோதகப்ரியனே
யாவர்க்கும் எளிய முஷிகவஹனனே
கற்பகத்ருவான வேழ முகத்தவனே
நன்வாழ்வு ஈந்த தெய்வமே !!!
 19 Apr 2012 18:32
Image

நுகர்வாய் என காத்திருந்து இரைந்துவிட்ட மலர்களை போல
கேட்பாய் என மரங்களின் நடுவினில் புகுந்து இசைத்து ஓய்ந்த வேனிற் காற்றினை போல
உள்ளம் உருகி இசைத்த இசையின் சுருதி இறங்கியதை போல
தவிழ வேண்டி நின்று மறைந்து விட்ட நிம்மதியை போல
பருகி சுவைக்க விழுந்து காய்ந்துவிட்ட கண்ணீர் துளிகளின் சுவை போல.......
என் பக்தி அணையாதிருக்க காப்பது உன் கடமை ...இறைவா..............
  20 Apr 2012 20:07
Image

பாட்டிசைக்கும் நேரத்திலே குயில் வந்து கூவுதம்மா
ஆனந்த ராக அலர்பிலே மயில் தோகை விரித்து ஆடுதம்மா
குருவியும் கிளியும் இசைக்கும் இசையில் மனமும் மயங்குதம்மா
வண்டினத்தின் ரீங்காரமும் கூடவே கேட்குதம்மா
பூவின் மணமும் வீசுதம்மா
நிலவின் ஒளியிலே நல்லரவம் சீருதம்மா
எழும்பி ஓயும் அலையின் நாதம் இனிக்குதம்மா
அவன் இயக்கும் இம்மேடையிலே நானும் ஒரு நடிகனம்மா
எழுதும் கவிதையிலே குறையும் தெரியுது அம்மா .......
 21 Apr 2012 04:09
 கதறினாலும் கிட்டாத பெண் தெய்வம்-பச்சிளம் சிசு
'அப்ரீனுக்கு நேர்ந்த துன்பம் ..அம்மா..
கண் கலங்குது நெஞ்சம் பதைக்குது
பிஞ்சு மகள் அடைந்த கொடூரத்தை கேட்டு ..
கதறி கதறி அழும் சிசுவை தீயிர் சுட்டு வாயினால் கடித்த தந்தை ...
பெண்ணாய் பிறந்தது.... பிறந்தது யார் செய்த பாபம் ?
இந்த மண்ணில் வந்தது யார் செய்த குற்றம்?
தாயே ஏன் இந்த வெறி ? குடி வெறி
கண் கலங்குது நெஞ்சம் அழுகுது
பிஞ்சு சிசு அடைந்த துன்பத்தை கேட்டு..
பெண்கள் சுதந்திரம் என ஓலமிடுபவர்கள்
கண் விழித்து விடை கூறவேண்டும்
 21 Apr 2012 22:11
Image


அறு துயில் நீக்கி உவந்துவந்து திருமலையில் வாழும் நெடியவனே !
பெரு வாழ்வு அளித்திடும் திருமகள் உறை மார்பா!
துரிதமுடன் பாஞ்சாலிக்கு துகில் அளித்த கரியவனே !
ஆயிரம் ஆயிரம் கோபியருடன் ஆயர்பாடியில் களித்த ஆலிலை கண்ணா !
அழகிய வதனா! வேங்கடவா!
நீயே பரமன்! ஜீவனை உவந்து காத்து
உன்பாத கமலங்களில் இருத்தி முக்தி அளிக்கும் நாள் எந்நாளோ !
 04 May 2012 05:41
Image
To me by my grand daughter...

குழந்தை ஒன்று நீந்தி வந்தது ..
நீந்தி வந்த குழந்தை காலை கட்டியது
காலை கட்டிய குழந்தை மடியில் தவிழ்ந்தது..
வளர்ந்து விட்ட குழந்தை கையை பிடித்து நடந்தது
பட்டம் பெற்ற குழந்தை கலெக்டர் ஆனது ..
கலெக்டர் ஆன குழந்தயை கடத்தி சென்றனர் ..
குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது..
உறக்கமும் போனது...
ஈசா...ஏசுவே ..குழந்தையை காத்து அருள்வாய் கர்த்தரே.
 07 May 2012 23:11
Image

அரும்பு மலரும் தோட்டம்
வாசம் வீசும் மலர்கள்
பூ கொய்யும் மகளரின் புன்னகை
காமம் மொழியும் கண்கள் ..
தயிர் பிசைந்த விரல்கள்..
கணவனை விளிக்கும் கரங்கள் ..
அவன் புகழ்தலை கேட்கும் செவிகள் ..
சுற்றும் விழிகள்
வேண்டுவதோ இன்னுமும் இனிக்கும் இரவுகள்..
  
12 May 2012 06:41
 http://i40.tinypic.com/1zzlv8z.jpg
 குறை காணும் உலகில் நிறை காண வேண்டினேன்
பகை காணும் தரணியில் நகை காண நல்கினேன்..
அம்மா என்று கூவினேன் ஏனென்று குரல் கொடுத்தாய்
சாத்வீகமான எண்ணங்களை தா …
ஏச்சும் பேச்சும் சீண்டலும் மனதை தீண்டாமலிருக்க அருள் புரிவாய் ..
புகழும் இகழ்வும் ஒன்றே என எண்ணி என் கதை தொடர வேண்டி நின்றேன் ..
தாயே அபிராமி …

சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து .
 14 May 2012 21:21
Image
கண்ணா ! இந்த சிறுசுகளை பார்..
வேண்டுவது சோறும் நிழலும் ...
செல்வத்தை நாட வில்லை ..
ஏன்? ஏன் ? இந்த பாராமுகம் ?
வினை பயன் என்று கூறி விட்டு ஓடி விடாதே ..
கோபியருடன் ஆடவும் ராதையுடன் கூடவும் ..
மாயன் நீ..
பார்த்தனுக்கு சாரதியாய் இருந்தும்
நான் சாரதியும் இல்லை ரதமும் இல்லை
ஐந்து குதிரைகளும் இல்லை...
செல்லும் பாதையும் நான் இல்லை...
நான் ரதத்தில் செல்பவன் மட்டுமே..
என்று கூற வில்லையா..
சொல் கண்ணா..
ரதத்தில் செல்பவன் மாயமாய் மறைந்து போகிறாய்
நீ சென்ற ரதமும் சாம்பலாய் போனது ..
வினை களை
எடுத்து சென்றது யார் கண்ணா..?
மயமான நீயா அன்றி சாம்பலான ரதமா?...
நான் வேறு செயல் வேறு என்று கூறவில்லையா....
வினை வந்தது எவ்வாறு..?
உண்மை...எது கண்ணா ? ஏன் இந்த மாய பேச்சு ?
ஆதரவு அற்றவர்களுக்கு எல்லாம் ஆதரவான பரம் பொருளே ..
இந்த சிருசுகளுக்கும் ஆதரவு தா ...
 15 May 2012 05:52
Image

சிவனே என்று இருப்பார் சிலர் ..
அவனே என்று இருப்பார் பலர்..
வசி வசி என்று இருப்பாரும் உண்டு..
அருளலாலளின் அமுதை உண்ண..
பாம்பு சித்தர் ஆடு பாம்பே என்ற உடன் ..
மேல் நோக்கி நகர்ந்தது அம்மா...
ஆறுமுக சக்கரங்கள் ஆறையும் கடந்து ....
வசியை கூடியது ஆடியது..
இருளும் நீங்கியது ஒளியும் தெரிந்தது ...
அமுதும் பொழிந்தது....
 17 May 2012 04:01
Image

வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..


( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)


சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் நோக்கி உள்ளே காரணம் கண்டறிந்து...
 18 May 2012 05:41
Image

புன்னகை தவிழும் கண்ணனின் ஸ்பரிசத்தால்
மூங்கிற் குழலி நெளிந்தாளோ…
கண்ணனின் தேனுரும் இதழ்களை பருக துடித்தாளோ
பருகியதால் இனிய நாதத்தை இசைதாளோ...
மூங்கிற் குழலி செய்த தவம் தான்
எத்தனை பெரியாதம்மா ..
கண்ணனின் சேர்க்கைக்கு ..
கோபியரும் ராதையும் காத்திருக்க
இமயோரும் தேவரும் நோக்கியிருக்க
இதழ்களின் தேனை பருகி பருகி மூங்கிற் குழலி இசைக்கும்
நாதம் தான் எத்துணை எத்துணை இனியது ....
கோபியரை பிரிந்தான் ராதையை பிரிந்தான்
மூங்கிற் குழலியை பிரிய மறுத்தான் ..கண்ணன்
அவளிசைக்கும் நாதத்தில் மயங்கி …..
 20 May 2012 21:24
Image


விஸ்வா… இது வரை நீ
மாயமான அகந்தையுடன் இருந்தாய்
அகந்தையுடன் பிறந்தாய்
அகந்தையுடன் வளர்ந்தாய்
தலை வணங்கா குணமுடையவனாய் இருந்தாய்
என்னிடம் இருந்த நந்தினியை இழுத்து செல்ல விழைந்தாய் ..
என்னுடன் பகையை வளர்த்தாய் ..
சகுந்தலை இடம் கொண்ட பெண் பாசத்தால்
இப்பொழுது உனக்குள் இருந்த 'தான்' என்ற அகந்தை அழிந்து போனது ..
கர்வமும் ஒடுங்கி போனது
என் காலடியில் கிடக்கிறாய் ...
இந்த அடக்கம் தான் உகந்த ஒன்று
அகந்தியும் கர்வமும் கூடா ஒன்று..எவருக்கும்
பிரம்ம ரிஷியாகும் தகுதியும் பெற்றாய்…
 24 May 2012 08:02
Image

பிரியா வரம் தருவாய் அம்பிகையே ..பாலாம்பிகையே ...

பிரியா வரம் தருவாய் ...

சக்ரவாசினியின் புதல்வியே ..

அன்னையிடமிருந்து ப்ரியாதிருப்புவளே..

என்னையும் பிரியாது காத்தருள் அம்பிகையே !

வேண்டியதை வேண்டியபடி தந்தருளும் தாயே …
கலையாத கல்வியும் மாறாத வசியமும் அழியாத செல்வமும்
தந்து அருள்பவளே .....
ஸ்ரீ வித்யாவின் சேயே...
‘ஐயும் க்லீம் சௌ …..’ உருவானவளே ...
குருவின் அருள் வேண்டி நின்றேன் …அம்பிகையே ....
  29 May 2012 18:42
Image

முத்து சுடர் ஒளி போல் முகத்தில்
மோகன புன்னகை ஒளிர ..
கூவும் குயிலின் இன்னிசை கண்ணன் குழலில் இசைய ..
தத்தி நடக்கும் தளிர் நடை அழகு ..
காணும் கண்கள் குளிர ..
இத்தலத்தில் யசோதை செய்த தவம் தான் எத்தனை பெரியதம்மா ...
நெஞ்சம் களித்திட நீலவண்ண கண்ணன் நேச கதைகள் மிக பேசி
தஞ்சம் என வரும் கன்னியர் உள்ளம் கலங்கிட பின் ஏசி ..
வஞ்சனை செய்யும் கள்வன் இவன் ..
ஊதும் குழல் இசையின் அரவம் கேட்டு ..
பசுவும் கன்றும் காடும் மலையும்
காற்றும் கடலும் ஓங்கார சுருதி கூட்ட…
தேடி அலைந்த ராதையின் உள்ளமும் உவந்து உவகை பெருக
நாடி வந்த கண்ணன் கூடி நின்ற
அழகு தான் கவியமானதோ!!
 12 Jun 2012 12:25
Image


Singing a song for you..
As you are away and I am flying away..
Like the swan ..
This is not a quote!
But what I wrote..
Somewhere on this letter
A drop of water..nay, a drop of tear
You can find..
For you to hold it as a gift..
Yes..as a parting gift..
As I keep nothing with me as mine
Except warmth in the eyes
And, a smile on the lips...

 15 Jun 2012 10:26
I am alone..alone with a faint heart…
Grieving and delighting..
Trembling to see the path behind me
And delighting to climb the last steps..
Preparing to see the the leaf wither..
In silence and In dusk and dawn..
And in the stillness of the night..
Sitting on the window sill…
peeping through the windows
Can I hope like an inquiring child..
As to when the leaf has to…



Image


 5 Jun 2012 21:00



Image

The tender flowers..
Blooming among the flowering sherbs and weeds..
Along a rocky tarrin……
The sunny breeze making them toss
Their head right and left..
As the Mangrove trees swaying in tune
While the older among them unable to move along..
It is hard not to be jealous of the noisy singing birds
Bringing joy to the heart weary and lonely..


 16 Jun 2012 09:46

 Here is a poem written by me in 1970.....

" If love is what the rose is..
And if I were like a leaf….
Our lives would grow together in
Sad or singing whether…."----------By Algernon Charles Swinburne


Were I the smile..
I can linger on thy lips
Were I the rhythm..
And you the melody
We can sing together
In the warmth of moon lit nights..
Were I the gentle breeze..
I can touch thy feet..
And, I know but they are soft and loveliest dreams
Mingling with the sweet thoughts….
And I am among my fountain of tears..
With a pensive mood and spirits dead ...


 16 Jun 2012 16:31

 அறிந்தும் அறியாதார் மறைந்தும் மறையாதார்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!


  16 Jun 2012 21:21
Some memories linger…
In between the pages of mind
Some sweet and some bitter
Floating softly around..
Bursting like a bubble
Bringing a smile or a tear
Longing to live again..
The hours and days gone by..
Through the silent moments
To keep them near…

 17 Jun 2012 08:06


"அனுபவப் பள்ளியில் - அரிச்சுவடி முதல்
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் .."(Arasi)

As such a knowledge is absent
Simpletons try to do the cooking …..
And Hamiltons try to eat..
Knowing not what it contains…..
- As told by some one
Having no illusions of where they belong, what they do and what they have known..

 18 Jun 2012 09:34
Chide me not, dear,
Imbecility not my virtue
And taboos not the hurdle
And, yet the tacit struggle…
Twinkling eyes and the lustrous smile
Are no longer mine..
When words have lost their meaning..
The sighs their value..
And, Music their rythem
When the eyes are dry….
An enticing song for thine life gay and blissful....
And I was waiting for this cheering hour..
Adieu!

 20 Jun 2012 11:56
Image


இதுவும் வாழ்க்கை என்பதை ஏனோ நானறியவில்லை..
குற்றங்களும் குற்றங்களை புரியும் ஈனர்களும்
உண்டு என்பதை அறிவேன்..
துன்பங்களும் விரோதிகளும் நிறைந்தது தான் உலகம்...
வாழ்க்கையில் இவைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்..
ஆனால் இது...

 21 Jun 2012 06:36

 பணிவும் பண்பும் பண்ணில் இசைத்து
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு
 23 Jun 2012 05:38
Image


When you are not there, what shall I look at?
You have not left your profile either..
Still, I can hear within myself
Movement of the steps soft and steady
The voice as sweet as honey..
The words spoken, the concealed laugh
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery…..
Where will it lead me?

 23 Jun 2012 09:37
Image


The treasures I hold as mine..
The quite hours and neat abode
The shrills of prayers and the joys of music..
The fragrant smell
The smiling children..
The moon lit nights on a yellow sky…
The gentle breeze and the blushing flowers…
The nature with its splenderous beauty …
The gushing waters and the floating fishes
Dancing salasa and cha cha on the water…
To the music of the day..
Above all, I treasure my free will
Refusing to be disheartened
Refusing to feel sad and cry
As In side the mind I hold God providing joyful things
As my treasure……








27 Jun 2012 15:47 
A smile on the face….
For the thoughts passing through..
Seeing the sun sets..and raising….
Seeing the floating clouds..white and black..
Seeing the drops falling down..
Seeing the rainbows along the sky..
Seeing the hill side grove..
Seeing the butter flies passing by..
Seeing the flowers bloom..
Seeing the birds cackle—
Seeing the Retreating waves…
Can there be a better artist than HIM?


28 Jun 2012 08:58 
Here is child
With her twinkling eyes..
The lips as pink as a rose.
Complexion Shining as bright as moonlit....
The curls of hair
Born in an unluckly war hit land
Where freedom is curbed..
Movements restricted..
Can the lotus bloom?


29 Jun 2012 18:51 
They seek only Gentle words
And kind treatment….

They sit together and spend their time…
For they feel lonely
Make them feel easy
Even when all are busy..

Going around are the children
No time to be with them…
To listen to the stories
They once listened with glee..

The fund of information stored
In their memory..they
would like to share with all…
That it may get carried forward and make all clever..

Do not hurt them even
When you dislike what they say..and forgive the repetitions
Listen with gentle words and treat them well…
Even in your hurry, don't fail to dine with them

For it will keep them happy....



29 Jun 2012 21:43 

செய்வினை தீர்கும் மாசு அற்ற குமரா!
மெய்பொருளே! அருமறை பொருளே! வித்தகா!
செய் வினையும் செய்ய படும் வினையும்
உணற ஒட்டா என் குருவுக்கு
பகைமைமோகமழிந்திட.
நற்பதவி கிட்டிட வேண்டி நின்றேன்...




30 Jun 2012 13:01
Does the flower knows the fragrance
When the flower blooms?......
But the bees know it as it is drawn to it…. ….
Can the moon see it’s reflection in the stream?
Or Does the the breeze aware of the chillness it carries?
Only lovers can enjoy in solitude..
Now as you are away
The heaviness of my sighs, you are not aware..
My heart knows it…



01 Jul 2012 14:13
Can I get back in to your womb..Mother?
Was it not a place of warmth?
Was it not a place where I was alone?
You were kind to feed me
And kind to carry me..
You were kind to fondle me…
And Sing a song to make me rest..
I was away but yet part of you..
And floating was a pleasure
In my joyous mood I used to kick
But not to hurt you..
Knowing well that it can keep you happy…
Vexed I am..now…
Unable to cope up with out you…



03 Jul 2012 13:40
Guru guha..where are you..
You can never be far away from me..
You inspire as always..
You push me up ..to a higher plane…
Where it makes difficult for others to reach..
With their thinking as small as pol pot..
I want to be free ..seek to curtail emotions..
To relax and to reduce the fire in my boosam..
Fire to be one with you…before long…

Kabir...
" Oh God! By reciting your name all the time I merged in you and my ego disappeared
My troubles of transmigration disappeared. Now, wherever I look I see you. ..."

" Power of Almighty dwells in every heart but is invisible
Just as the red color resides in the green Mahanadi leaves and is invisible"

" It is the mercy of my true Guru
that has made me to know the unknown. "

All quotes by Kabir..


04 Jul 2012 13:12
விளக்கை தேடி வரும் விட்டிலை போல...
மலர்களை நாடி வரும் வண்டினம் போல...
ஆதவனை சுற்றி வரும் விண்மீன்களை போல...
பொய்கயில் துள்ளி விளையாடும் மீன்களை போல...
கண்ணனை தேடி வந்த கோபியர் போல...
இனிப்பை உண்ண வரும் எரும்பினை போல...
அடிவாரம் சுற்றி வரும் பக்தர் கூட்டம் போல..
உன்னை நாடி வந்தேன் குகனே.....



Ramana Maharishi..

Surrender to Him and abide by His will
whether he appears or vanishes;
await His pleasure.
If you ask Him to do as you please,
it is not surrender .......



09 Jul 2012 06:22
Now, there is an end to the night…..
Oh! It is beginning of the day…..
The glorious morning hours…….
There is no more dakness…..
Brightness everywhere….

Pair of sparrows sitting on the sill
Clattering with open wings……
Was it a thousand times?
A piece of music…is it sahana?

I have time to ponder …
In the chillness of the cool air….
Is it wisdom that I yearn?
Or is it a fortune…….
Or longing to be with Him?


09 Jul 2012 20:00
‎'E'-SWARA-Barat Ratna Mother Theresa http://www.youtube.com/watch?v=aLEnrlNTuEk

Mother…..you are rich in your thoughts..
And in your deeds..
Yet thought them humble
You looked upon the children
unwanted, unloved, uncared for, forgotten
As your own..And the destitutes….and the leper…
Provided them comforts…
You did not wait for others to do..
You did it yourself..
With a smile sweet and serene
For, You saw God in them..
You did not ask for success….
You needed only faith..
And the love and affection….
Just to remove the feeling of unwantedness..
You are still there with us..
A living God…


11 Jul 2012 21:59
Everything is born without a like..
And, has purpose to live on…
Peacock with its feathers..
Cucoo with its music…
Deer with its eyes…
Rabit with its speed..
An elephant with its tusks…
Tortoise with its shell..
The floating clouds and the swaying flowers…
With multitude of colours
The sun set and the moon rise
The flowing water…..
Keeping silence
And speaking in a language of their own….
What is the purpose… behind my life…
Guru guha…show me the way..




12 Jul 2012 20:57
When the game is over..
Every thing goes back in to same box..
The good and bad..
The tall and short..
The black and white..
The lucky and unlucky..
The wealthy and the poor..
the strong and the weak
Yes, every thing..
So, play your game fairly and squarely….


13 Jul 2012 07:50 
A whisper in to thine ear…..
Take me to white capped mountains…..
Longing to see the snowfall
And to ride in a cable car
A longing comes to my mind..
To keep the fun
Aging may not keep away the thrill..
As the mind is keeping young still
You are not alone in your endeavour….
Many others promised and failed
To help me out there…





13 Jul 2012 18:46
நாடி வந்தேன் உன்னை தேடி வந்தேன் என்றார் அரசியார்..
பழம் நீ என்று பசியுடன் தேடிவந்த அம்மைக்கு
கொடுத்தது ஊதி தின்ன இரண்டு நாக பழங்கள்...
கருணையின் வடிவே இதுவோ உந்தன் கருணை...
சிந்தையில் நிற்கும் குரு குகா ஷண்முகா
அம்மையின் இனிய நாதத்தில மயங்காயோ…
கருணா கடாட்சம் அருளாயோ…
http://www.youtube.com/watch?v=dvDInrKPn60


14-07-2012


16-072012..



Sitting at the meadows
With a LT at my lap
Listening to the melody of R and J…
‘Sundara tara deham’……

Is it Kāshirāmakriya or kamavardhini…?
Or Pantuvarali…..?
Which one is she singing….
Is it not all are one..??

It was a summer day…
With Flashing thoughts in the mind..
And looking at the sky…
Oh! What a contrast is it to buy...!

The blueish sky..
The whitish floating clouds..
The pinkish swaying flowers……
And, the greenish meadow…

Who can be the painter…I thought
To bring the picture live…..
Was He not a divine painter…?

The genteel breeze…
The ringing melody..
The painter’s skill……
The thoughts within….
Are all part of His will…

It flashed the meaning of a song…
“Seeta vara sangeeta jnanamu”
The sublime knowledge of music…
Emancipation through music…
Comprehending that the whole cosmos
Is the manifestation of the Supreme Self…..



 18 Jul 2012 20:24 
இன் சுவைகளை அறியாது போனேனே...
தாளத்தில் வண்ணங்கள் ஆடிவர கண்டேனே..
கவிதை மணம் காற்றில் வர சுவைத்தேனே...
நாதத்தில் மனம் நிறைய களித்தேனே..
பரமனின் பாடலை ரசித்தேனே..
ஆரபியில் மனத்தை இழந்தேனே


AadidanoRanga -Arabhi-Purandaradasa...Arabi..

http://www.youtube.com/watch?v=0FrRC9Wlyxs



 19 Jul 2012 16:56 






20 Jul 2012 22:27
தொடர்ந்து வரும் ராகங்களில்..
சாரங்ஙன் மருகனை சாவேரியில் விழித்து..
நாயகியை மோகனத்தில் இசைத்து...
சராமதியை சாமனுருவில் கண்டு..
தோடிக்கு ராகம் பாடி
பிலஹரிக்கு பல்லவி தேடி..
பைரவிக்கு நிரவல் கூட்டி..
நாட்டையுடன் பூபாளமும் பாடி
சந்தன குழம்பு மணக்க..
ராக மாலையும் சூட்டி
பள்ளி எழுப்பினேன்..
குமரா! இன்னும் என்ன உறக்கம் !!

sarangan marugane....
Ragamalika...
Talam: Adi (Composed by yazpanam Veeramani Iyer)...

Rendered by Maharajapuram Santhanam...

http://www.youtube.com/watch?v=x1o4XlThv98



22 Jul 2012 14:30 



25 Jul 2012 03:10
சித்தம் தெளிவிப்பாயோ
உன்மத்தம் பிடித்தலையும்
என் சித்தம் தெளிவிப்பாயோ..
பித்தனின் இடபாகம் கொண்டவளே..
உன் சீறடி வேண்டி..
நித்தம் நித்தம் உள்ளம் உருகினேனே
என் பித்தம் நீக்குவயோ...
வருத்தம் தீர விருத்தம் கேள் என்றாய்..
விருத்தம் பாடினேன்...
வருத்தம் தீருவது என்றோ...
Petra tai tanai (viruttam) - ragamalika - ramalinga adigal
http://www.youtube.com/watch?v=RVhhzOQe ... re=related


25 Jul 2012 07:57
Is there any language for smiles..
Smile when you would like to hide..
Smile when in love
Smile when you are happy…
And also when in pain…
Smile with a wink…
Also smile when you seek a help..
Reckless smile..and a crazy smile too..
Still it is a Language of smiles…
And we all smile in the same language….
And for a smile no transliteration is necessary..


28 jul 2012 07:10


அஞ்சிய நடயும்
மஞ்சி இணைத்த இடையும்
கொஞ்சிய மழலையும்
மறுவிட்ட முகமும்..
கருவட்ட விழியும்...
கெஞ்சும் முகமும்..
வஞ்சனை இல்லா பார்வையும்
பஞ்சு அன்ன மேனியும்..
கார் நிற வண்ணமும்
புரளும் முடியும்
கையில் குழலும்
நெஞ்சில் கருணையும்
கண்ணா! பரமா!
உன்னை நெஞ்சில் இருத்தி
உருகி உருகி மனம் களித்தேன்...




 31 Jul 2012 07:19
Image


To day I am happy..
I am not weeping with in me..
The distress has gone..
The heart is light…
Lost its weight..
You know why..
Friend is with me…a happy guy..
Can somebody tell me why..
I cannot use my hands..
And only have impaired legs..
Living like this for long….
But, has a heart as tender as a butterfly
And a mind too as strong as a rock..
Learning to live like this..
Using what are left out….
Do not pity me..
That is what I hate..
As it bites me
Yes…. bites my ego……
I have no regrets…..
Nor have I any complaints..



03 Aug 2012 13:57
Image

This is a Shared image from a Face book friend...

 காவிரியில் நீர்வற்றிவிட்டது என்று கலங்கினார்....
பெருக்கு எடுத்து ஓடுவதை காணீர்..
வற்றிய உடம்பில் பால் உண்ண விழையும் பிள்ளை....
வற்றிவிட்ட பாலை நெற்றி சுருங்க ஈய விழையும் அன்னை..
நோக்கும் உள்ளங்கள் குமுறி அழும்...
வழியும் நீர் ஆற்றிற் கலந்து பெருக்கு எடுத்து ஓடும்..
கண்களும் வற்றி விடும்...



07 Aug 2012 16:57
I am in distress..
Unable to know why..
My friend is to be taken to ICU..
They say no activity…
Have to put him on ventilator..
To keep him survive
Often I find him in my thoughts dry and hollow
While my head is on a pillow…
Unable to get the reason…
As to which caused the inactivity….
Causes going dry ..?
Or egos running high…?
Restore the activity in him…
Fast and early...


 07 Aug 2012 20:52
ImageShared from Face book friend...

Image shared from a face book friend..

I thought life was easy and soft..
Sweet and joyful….
Pleasing and simple..
Smooth and melodious….
Oh! What a sight is this??
Can life be hard and painful?.
Bitter and ugly…..
Rough and torturous…..
A child starving..
And a vulture waiting…..
To quench its hunger ……
It is happening in a civilized world..!!
Where People who have plenty to eat….
The bread smoothened by butter..
Will never be haunted by such sights…


Note:
The photographer who took the picture of the starving African child with a vulture waiting for her death later killed himself.
His suicide note said “I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain, of starving or wounded children … The pain of life overrides the joy tothe point that joy does not exist….




08 Aug 2012 17:52
சீடையுடன் முருக்கும்
தேன் குழலும் அதிரசமும்
முத்து சரிகையும்...
அவலும் வெல்லமும்
வெண்ணையும் பாலும்
கெட்டி தயிரும்
வெற்றிலை பாக்கு பழங்களும்
கிருஷ்ணா முகுந்தா
மாதவா கேசவா..
பரமா புருஷா..என்று
பாந்தமுடன் படைத்து..
ஆடாது அசங்காது வா கண்ணா...
என்று விழைத்தேனே..
வருவாயா ..என் வினை தீர்க்க...


Pithukuli Murugadas - Aadathu Asangathu vaa Kanna

http://www.youtube.com/watch?v=xwjIC-qQa2U


 13 Aug 2012 14:37
நாலும் தெரியல..

நடப்பும் தெரியல..

நவின்ற சொல்லுக்கு பொருளும் தெரியல..

மதியும் மழுங்கி போச்சு..

எண்ணமும் வறண்டு போச்சு..

கவி எழுதும் நயமும் போச்சு..

சிவாய நம உரைக்கும் திறனும் போச்சு..

நிதியும்..கிருபா நிதியும் சிதைந்து போச்சு...



PUNARVASU

13 Aug 2012 18:48
Sh ri VK, thank you .

நாலும் தெரியல நடப்பும் தெரியல
மதியும் மழுங்கிப்போச்சு
எண்ணமும் வறண்டு போச்சு
கவிதைத்திறனும் கலைந்து போச்சு
என்று கவிதையாய் எழுதிய
உமக்கா கற்பனையில் வறட்சி?
இல்லை இல்லை இல்லவே இல்லை.
தொட்டனை த்து ஊறும் மணற்கேணி அது!



15 Aug 2012 05:51
Somebody was following me…
There are the ones who can only follow..
And, not lead…
As it is not in their trait…
To get ‘great trifle’ gain..
But, can never be on par..

Just like my shadow..
Some times lengthy and some times short…..
But can never go beyond….
Can only follow and always be behind..
And always needs a light…..
As are not bright……
Its fate is tied to me……
To be always at my feet……



 18 Aug 2012 05:15
பக்தி ஒன்றே போதுமே...

குமரனின் மனதை கவர....

பக்தி ஒன்றே போதுமே....

அவனியில் கந்தனை அடைய...

பக்தி ஒன்றே போதுமே....

'கை கட்டி வாய் பொத்தி'

பக்தி செய்தால்....

தானே வந்து புகுவான்...மனதினில்...முருகன்...

கட்டவிழ்பான் கந்தன்...

ஊழ்வினை கட்டை நீக்குவான்...தரணியில்...

துயரமதை துடைப்பான்...மகிழ்விப்பான்...வேலன்..

இன்னலை நீக்குவான்..

பின் நின்று காப்பான்…

அவனை அடைய பக்தி ஒன்றே போதுமே...

விநயமும் கவிநயமும் இழைந்து வரும்…

கவிதை புனையும் ஆற்றலை அளிப்பான்..

அளித்து மகிழ்வான்...

ஆண்டியாய் நின்றாலும்... குகன்..

வேண்டியதை தர தயங்கான்..

தத்வமிதை அறியா அகதிகளாய் நிற்க

இன்னமும் தகுமோ...




Swamy Tejomayananda
OM
Happiness is in being ONE…
Know thy self.
The moment you know your roots…
You flow with love and want to spread love and happiness.
When the veil of ignorance falls down and you
Sit hours together with tiny petals shining with dew pearls that is the real beauty……
Just sit in lap of nature where there is no pain and pleasure…just Divine Ecstasy………
HARI OM..

leave behind your desires....
present moment
be with your roots..
is of universal love....

22-01-2013



22-01-2013



The mountains and streams
The rivers and the ocean
The waves and stars..
Are all smiling at me ..nay laughing at…
Smugly laugh full of pathos or is it irony?…..
Intrigued as I …asked them why?..
In a country where glory was held high
Where …. ‘The Words are to
Come Out From The Depth Of Truth’….
They have become a fiction..See around you what is happening..
Deceit and hypocrisy…… have its way….
Paving the way for truth to hide its face…
Hiding its face in shame….
Are there any Semblance of recovery……they yelled..
Do not lose faith …..I countered….. ..


25-01-2013
“The clear stream of reason has not lost its way into the dreary desert”
Righteousness will always win…….
satyameva jayathe

25-01-2013
So he passes through the meadow where flowers bloom…
Tossing their heads in the chilly winter air..
Along with his herd of sheep….
With wild incredible dreams..
On some one waiting on the way..
Singing a song in a whisper which only he can hear…
And its warmth only he can feel..
With a smile lingering on his lips…
-vk...

Mangalathai Kelungal

Mangalathai Kelungal...
 

  மங்களத்தை கேளுங்கள்
நடப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள் ..
இதோ அவளே வராள்..

வாடி மங்களா..கத்திரி வெயில் எப்படி இருக்கு...
ஒ அதுவா ..மத்த ஊர்களை விட இங்கே கம்மி மாமி நுறு தாண்டலை...

ஏண்டி தேர் விபத்து நடந்ததாமே ..
ஆமாம் மாமி..ஐந்து ஊரில் நடந்ததாம் இந்த வருஷம் ..
நெறைய பேர் இறந்து போனா..
ஏண்டி தெய்வ குற்றமா ..
இருக்கும் மாமி...கெட்டவா பெருகி விட்டா..

மங்களா காய் கரி விலை ஜாஸ்தியாய் விட்டதா
வேலை செய்பவள் சொன்னாள்..
ஆமாம்..பீன்ஸ் எழுபது காரட் முப்பது ..அப்பா சொன்னார் ..

நீ கிரிகெட் பாக்கறயா..நம் ஊரு நிலைமை ..
ஆமாம் போங்கோ இப்படி விளையாடினா எப்படி..சேர்ந்தாபோலே
ஐந்து ஆட்டம் தோத்தா...

இன்னி செய்தி தெரியுமா ..ஐஷு இனிமேல் நடிக்க போவது இல்லையாம் ..
ஏண்டி...கொஞ்சம் உடம்பு பெருதுடதாம் ..

மாமி ..சுப்ரமணியபுரம் படம் பார்தேளோ..
அதுலே கண்கள் இருந்தால் பாட்ட கேட்டேளா..
மாமி அது என்ன ராகம் தெரியுமா ..ரீதிகௌலா..

நேத்து தஞ்சாவூர் கல்யாணராமன் பாட்டை கேட்டேன் மாமி...
தோடி ராகம் தானம் பல்லவி ..கனக சபாபதி திருநடனம்...
உடம்பே பூரிச்சு போச்சு ..

நானும் போன வாரம் மதுரை சேஷ கோபாலன் பாடிய
சத்ய நாராயணம் உபாஸ்மாஹே ..சிவ பந்துவரளி ..
ஒரு மணி நேர கச்சேரி கேட்டேன்..

ஏண்டி ..
மாமி கொஞ்சம் வேலை இருக்கு..நான் வரேன் ..



.
venkatakailasam
posted on 28th may 2012.copyright..

என்ன மங்களம் இன்னிக்கு சீகிரமாவே வந்துட்டே ..
ஆமாம்...

கொலவெறி டி பாட்டு கேட்டு இருக்கேளா..உலகம் பூராவும் ப்ரிசிதி ஆச்சே ...
அது நாயகன் படத்திலே இளையராஜா மெட்டு போட்டதாம்..அதை காபி அடிச்சான்னு பேசிக்கிறா ..
சேரி அது எப்படியோ போகட்டும் ..

பார்த்தசாரதி பெருமாள் ஏல பாட்டு நு கேட்டு இருக்கேளா ..
அதை யார் கட்டினான்னு தெரியலை..
தி எஸ் ராமானுஜ அயன்கார் பழைய காலத்துலே பதிபச்சி இருக்கார் ...
அதுலே ரொம்ப சுவாரஸ்யமான செய்திகள் எல்லாம் இருக்காம்..
வித விதமான அரிசி வகைகள் பருப்பு வகைகள் எல்லாம் வருதாம்..கேளுங்கோ ..
பால் வடியும் சம்பா
கோடி சம்பா
கும்கும சம்பா..
கொத்து முத்து சம்பா ,
குட மல்லி சம்பா
அனுமத்த சம்பா
கொடுகு சம்பா
மிளகு கற்பூர சம்பா
கன்னி அரிசி
கருப்பு நல் அரிசி
சடை சம்பா...
போருமா...

பார்த்தசாரதி சுவாமிக்கும் பாரியாள் வேதவல்லி தாயாருக்கும்
காணிக்கையாக கப்பலில் வந்து இறங்கிய வித விதமான மஞ்சள் வகைகள்
மருந்து வகைகள் துணி வகைகள் என்று பலவும் விவரமாக இருக்காம்...
அதில் வரும் சித்தர்கள் பாட்டு போல ஒரு பாட்டு...
நமசிவாயம் கொண்டு நந்கூரம் பாய்ச்சி
நாலு விதத்தில் பீரங்கி ஏற்றி அஷ்ட்ட்ராஷறதிலே காற்றுகள் எல்லாம் பாய
கப்பல்
வந்து சேர்ந்தது அம்மா !
அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி படிக்கணும் ..


ஒரு துயர சம்பவம் ..தழைய தழைய நைடியுடன் குழந்தயையும்
எடுத்துக்கொண்டு வரும் பொழுது தடிக்கி விட்டு விழுந்து குழந்தயை சாக
கொடுத்தாள்....பாவம்!!

கம்ப ராமாயண பாட்டு....அண்ணலும் நோக்கினான்...
மதுரை சேஷ கோபாலன் பாடியது சமீபத்துலே கேட்டேன் ..என்ன இனிமை !!!

ரொம்ப நாளா லக்ஷ்மி கல்யாணத்தில் வரும் ராமன் எத்தனை ராமனடி என்னராகம்
என்று தெரியாமல் இருந்தேன் ..அதில் சுபபந்துவராளி சாயல் நன்றாகவே தெரிந்தது ..

நேற்று கிளீவ்லாந்து ஓஹியோ திருவையாறு போட்டோ பார்த்தேன்...நிறைய தெரிந்தமுகம்..
ஆனா பலமுகங்கள் நம்ம திருவையாற்றிலே தெரியவில்லை ..

மங்களா கோவிலுக்கு வரையா..
இல்லே நான் அப்புறமா போறேன் .

( 9th may 2012-copy righted..)


மங்களா நேத்து நீ சொன்னது மனசுக்குள்ளே நினைவாகவே இருந்தது
நம்ம திருவையருலே பல முகங்களை பார்க்கவில்லை என்று நீ சொல்லியது ...
என்ன தான் எத்தனை ஊர்களில் உற்சவம் நடந்தாலும் ..
சங்கீத முமூர்திகள் பிறந்த ஊரில் காவேரி நதிகரயில்..
தியாகராஜர் சமாதியில் உட்கார்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை படுவது போல் அமையுமா ?
அது அவளோட சௌகரியம் என்று விட்டு விட வேண்டியது தான் ..
என்ன நான் சொல்லறது ..
ஆமாம் ... ஆனா ஒன்று..பக்தி ஒன்று தவிர வேறு ஒரு சிந்தனையும் கூடாது..
சரியாய் சொன்னாய்..

வீணை காயத்ரி வெளி நாட்டுக்கு எல்லாம் போவது இல்லையா ..
எனக்கும் தெரியலை ..
காயத்ரி வீணையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் வாசிச்சு இருக்காளே
கேட்டு இருக்கேளா?
அது எப்படி கேட்காமே ...சாத்வீகமான காயத்ரியின் தெய்வீக மணம் நிறைந்த வாசிப்பை..
பெரியவளிடம் வாசித்து சந்தன கிரீடம் பெற்றவளாசே..
அவளோட சரசிருகா ..கேட்க சலிக்காத வாசிப்பு..
வறட்டு கௌரவம் பார்க்கும் உலகில் இவ்வளவு சாத்விகமான காயத்ரி..

வீணாஜி யோட கச்சேரி பதிமூன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு கேளுங்கோ ..
இதை எழுதி கொள்ளுங்கோ ... http://www.mudhra.org/டிவி...

நீங்க வீணா பாலசந்தர் பற்றி விக்ரம் சம்பத் எழுதிய புத்தகத்தை படியிங்கோ ..
அவரை பற்றி நிறைய செய்திகள் சொல்லி இருக்கார்..

இன்னிக்கு குருவாரம் .. சாய் பஜன் கேட்டேன்..
உஷா சேதுராமன் ,கல்யாணி சுந்தர்ராஜன் பாடியது...
என்ன ஒரு குரல் வளம்...

சின்ன குழந்தைகள் இப்போ தெய்வ பிரபந்த பாடல்களில் பாட நெறைய
உற்சாகம் காட்டு கிரர்களாம்....
கொஞ்ச நாளைக்கு முன்னால் ஆழ்வார்களும் தமிழ் இசையும் என்று பொதிகை டிவி யில்
காயத்ரி கிரிஷ் நிறைய பாசுரங்கள் பாடி இருக்காள்..நான் சிடி தரேன் ...கேளுங்கோ..
இனிமையான குரலில் காலை வேளையில் பாசுரங்கள் கேட்பது தெய்வீமாகஇருக்கு ...
என்ன ரொம்ப நேரமாச்சா....சரி..

10th may 2012 ( copyrighted)

என்ன மாமி..சாப்பிட்டாச்சா ..
ஆச்சு மங்களா ..வா..இன்னிக்கு சீகிரமாவே ஆச்சு..
மாமா செயின் வாங்க கடைக்கு போலாம்னு சொன்னா..
வெளியில் போனவவா இன்னும் வரலை..நேரம் ஆகும்னு போன் பண்ணினா..

நீங்க சமீபத்துலே நடந்த தனிஷ்க் ஸ்வர்ண சங்கீதம் நிகழ்ச்சியை பார்த்தேளா ..
பார்த்தேனே..
நல்ல பாடரவா நிறைய பேர் இருக்கா மாமி ..ஆச்சரியமாய் இருக்கு ..
சௌம்யாவும் அசோக் ரமணியும் நடத்தினா ..பிரபலங்கள் வந்து போனா ...
முதலாவதா வந்த அஸ்வத் நாராயணன் பாடின கீரவாணி ராகம் தனம் பல்லவி நன்றாகவே
இருந்தது ..பத்மா நாராயணசுவாமி கிட்ட கத்துகிராளம் ..
இரண்டாவது வந்த அபூர்வா,நளின காந்தி பாடினாள்...அனாஹிதாவோட தங்கை...
குரு...கிரண்ஜி..

இந்த வருஷம் ராம்ஜியோட பாலபிரம்மம் நிகழ்ச்சி நாளைக்கு வாணி மகாலில் நடக்குமாம் ..
எப்படி இருந்தாலும் ஜூன் மாசம் ஜெயா டிவியில் வரும்....


நீங்க கேட்டேளா..ஏப்ரல் மூணாம் தேதி கணேஷ் ..அவரோட சாஹித்யம்..ஒரே வரி பாட்டு
தியாகராஜ மனோஹரி குருகுஹ ஜனனி ஷ்யாம கிருஷ்ண சஹோதரி ...அந்த பாட்டிலே
பஞ்சரத்ன கீர்தனைகளோட ஐந்து ராக ஸ்வர மாறுதல்களையும் அவர் கையாண்ட விதம்
ரொம்பவும் நன்றாக இருந்தது என்று என் அத்தை சொன்னாள்..
உன் அத்தை திருவான்மியூர் தானே இருக்கிறாள் ..
ஆமாம் மாமி அங்கே அம்ருதபாரதிலே தான் கச்சேரி நடந்தது ..
கேக்கவே நன்நா இருக்கு.. இந்த பாட்டெல்லாம் எங்கே கிடைக்க போருது ...

அதே மாதிரி உன்னி கிருஷ்ணன் ஹம்சத் த்வனியில் பாடிய
சராமதி ராகம் தானம் பல்லவியும் சூப்பராக இருந்ததாம் ..

கோவிந்த ராவும் அவரோட குரு முசிறி அவர்களை பற்றியும் நிறைய குறிப்புகள் ..
படிங்கோ ..இதோ எழுதி வைச்சுகொங்கோ..
http://www.thehindu.com/arts/music/article3404322.ece
மாமி..ஒரு சேதி தெரியுமா ..பதினொன்று ஏப்ரல் தொளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருஷம் தான்
சென்னயில் ட்ராம் தனது ஒட்டத்தை நிறுத்தியது..

முதன் முதலில் இந்தியாவில் தயாரித்த படம் ஹரிச்சந்திரா
வருஷம் ஆயிரத்து தொளாயிரத்து மூன்று ..நுறு வருஷ கோலாகலம் இந்த வருஷம் தொடங்கும் ..
மாமி ..மாமா வர்றார். அப்புறம் வரேன்..

11 May 2012-( copy righted) 
மாமி.. நேத்து நாய்டு வகுப்பை சேர்ந்த சிநேகாவிற்கும் பிராமண வகுப்பை
சேர்ந்த பிரசாந்திற்கும் கல்யாணம் நடந்து முடிந்தது ...அப்பா அம்மா சம்மதத்துடன் ...
அப்படியா..

இன்னிக்கு மதியம் ஒரு மணிக்கு எம் டி ராமநாதன் பாட்டை கேட்டேளா..ரேடியோவில் ..
அவர் பேரை சொன்னதும் அவர் பாடிய பாவயாமி ...ஞாபகம் வரது..எத்தனயோ பேர் பாடிஇருந்தாலும் அவரது ஒரு தனி அழுத்தம் ..சீடீ தரேன் மாமி கேளுங்கோ .....

கல்யாணராமன் பாடிய பஞ்ச மாதங்க முக என்ற மலஹரி ராக கிருதி ..தீக்க்ஷதர் எழுதியது ...
சஞ்சய் பாடிய கோவிந்தராஜன என்ற மகபௌலி ராக கிருதியும் நேத்து கேட்டேன் ..
இந்த எழுதிகோங்கோ..
http://www.youtube.com/watch?v=7c67NTvS ... lyanaraman padiyathu…
http://www.youtube.com/watch?v=lPn_46HMPPA sanjay padiathu..


மாமி.. ராக நிரோஷிட்டா பற்றி கேள்வி பட்டு இர்ககேளா..
இல்லையே மங்களம் ..
இந்த ராகத்திலே ம ப -இரண்டு ஸ்வரங்களும் இல்லை ..
இது இரண்டும் சொல்லும்போது உதடை தொடும் ..
'நிரோஷிட்டா'னா அது இல்லாமல் உதட்டை தொடாமல் பாடும் ராகம் ..
ராஜா ராஜ ராதிதே என்ற பாட்டை முத்திய பாஹவதர் கட்டி இருக்கார் ..சாமுண்டீஸ்வரி பேரிலே ...
மைசூர் மகாராஜாவுக்கு உதடு வீங்கி இருந்ததாம்... அப்போ ஆஸ்தான விதவனாக இருந்த பாஹவதர் சாமுண்டி சன்னதியில்
இந்த பாட்டை பாடியதும் அவருக்கு குணமாய் விட்டதாம்..
மதுரை டிஎன்ஸ் கட்டிய இந்த ராக தில்லான என் எஸ் ஜி பாடி இருக்கார்...
காயத்ரி கிரிஷ் ராஜா ராஜ ராதிதே பாட்டை பாடி இருக்கா...இதையும் கேளுங்கோ மாமி..
http://www.youtube.com/watch?v=E7XNTngpxmI


மாமி இன்னமும் ஒரு சூப்பர் பாட்டு..கே வீ என் பாடியது தூரன் எழுதிய ராம் சுரத் குமார் பாதம ..சாரங்கா ராகத்தில் .
http://www.youtube.com/watch?feature=pl ... gN9rie8_xU



பெண் குழந்தைகளை கர்பத்திலேயே கொல்லுவது சம்பந்தமாக
அமீர் கான் டிவி களுக்கு அளித்த பேட்டி இப்பொழுது பரவாலாக பேசபடுகிறது ..
ராஜஸ்தானில் இந்த கொடுமை அதிகமாக நடக்கிறதாம்..
வரதஷனை பெண் பிறந்தால் கொடுக்க வேண்டும்
ஆணாக இருந்தால் வருவாய் .
இந்த நிலைமை என்று மாறுமோ..??
12 May 2012 ( copy righted)
என் மங்களா காத்தாலை வரலை..
ஏண்டி...கண் எல்லாம் சிவந்து இருக்கு ..
அழுதியா..என்ன ஆச்சு..
மாமி நீங்க தாரே சமீன் பர் பார்த்தேளா ..
ரெண்டு வருஷங்களுக்கு முன் வந்தது ..அமீர் கான் படம் ..
ஒ பார்த்து இருக்கேனே..என்ன மாதிரி படம்..கண் எல்லாம் ஜலம்..
ஆமாம் மாமி ..யார் கண்ணில் தான் ஜலம் வராது..
அந்த பையன் இஷான் என்னமாய் நடிக்கிறான் ...
அவன், அவன் அப்பா அம்மா அண்ணன் அமீர் எல்லாருமே நன்றாக செய்திருக்காள்..
அந்த பாட்டு இஷான் போர்டிங்க்லே பாடறது..
மேரி மா ..
மாமி அதை இன்னுரு தடவை கேளுங்கோ...
http://www.youtube.com/watch?v=anonHtYQ ... ure=fvwrel


மாமி நேத்து சொன்னேனே பெண்சிசுவை துன்புறுத்துவது பற்றி அமீர் கான்

சொல்வது பற்றி ..

சத்யமேவேஜய்தே..அப்படின்னு ஞாயறு காத்தாலேபதினொரு மணிக்கு

starplus டிவி இல் இதை பற்றி அவரோட நிகழ்ச்சி பார்க்கலாம் ..ஆன்லைனிலும்

இது வறது.. http://satyamevjayate.in/



மஹா பெரிவாகிட்டே ஒரு பண்டிதர் ஆடம்பரமா வந்தார் ..

அவரை வரவேற்ற பெரிவா என்ன என்பதை போல அவரை பார்த்தார் ..

சுவாமி.. கீதையில் ஒரு சந்தேகம் ...நிமிர்ந்து உட்கார்ந்த பெரிவா

தான் சீடர்களை கூப்பிட்டு பண்டிதருக்கு மூன்று முறை பிரதஷினம் செய்ய சொன்னார்..

ஏதும் புரியாத பண்டிதர் என்ன சுவாமி ..இதெல்லாம்...

கீதையை நான் படிக்கும் பொழுது பத்திக்கு பத்தி ஆயிரம் சந்தேகங்கள் வறது ...

உங்களுக்கு கீதையில் ஒரு சந்தேகம் தான்.. எவ்வளவு பெரிய பண்டிதர் நீங்கள்...அதான்..

பண்டிதருக்கு கூனி குறுகி போனார் ..தலை குனிவு ..

பெரியவா காலில் விழுந்து நமஸ்கரித்தார்..

மாமி பெரிவா பற்றி பேசும் பொழுது ..இன்னும் ஒரு செய்தி..

காணமல் போன சந்தானத்தை பற்றியது ..

யாரு மங்களா..

பெரிவா சதாரா என்ற ஊரில் இருந்தார் ..

நெய்வேலி மகாலிங்கம் பெரிவாளின் பரம பக்தர் ..

அவரும் அவருடைய நண்பரும் காணாமற் போன நண்பரின் மகனை

பற்றி முறையிட பெரியவாளை பார்க்க அங்கே வந்தார்கள்...நிறைய கூட்டம்..

தரிசனத்திற்கு.. உள்ளே இருந்த பெரிவா மகாலிங்கத்தை அருகில் வர அழைத்தார்..

கண்ணீர் சொரிய நண்பர் பெரிவா விடம் மகனை பற்றி கூறினார். பெரியவா தான்

மகன் கிடைக்க அருள் புரிய பிரார்த்தித்தார் ..மகனுடைய போட்டோவை பெரிவா பார்த்து ஆசிவதிதார்.

பிறகு நம்பிக்கையுடன் இருவரும் திரும்பினார்கள் ..

பல ஊர்களுக்கு சென்ற மகன் துங்கா நதியில் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனுள் ஊருக்கு

உடனே திரும்படி ஒரு குரல் கேட்டது ..மகனும் திரும்பி விட்டான்..

அந்த மகன் தான் நெய்வேலி சந்தான கோபாலன் ..

யாருடி சொன்னா மங்களா

பெரிவா பற்றி செய்திகள் நெறைய நெட்டில் இருக்கு மாமி..

ஒரு பாட்டு நினைவுக்கு வறது மாமி..

கணேஷ் அவர்கள் பாடியது..

கருணை பொழியும் கண்கள் ..

இதுவும் தூரனுடைய பாட்டு..

http://www.youtube.com/watch?v=IngQ6VeOy5E



மாமி.. ரேவதி ராகத்தில் தஞ்சாயூர்சங்கர ஐயர்கட்டியது ..

டி கே ஜெயராமன் பாடிய..

மகாதேவ சிவ சம்போ ..

http://www.youtube.com/watch?v=WERTGZR7xLQ&feature=ப்ழ்ச்ப்

மங்களா உன்னேட பேசினால் நேரம் போவதே தெரிவது இல்லை ....
13 May 2012 ( copy righted)
என்ன மாமி ரெண்டு நாளா காணல..
என் மச்சினர் பையன் நிச்சயதாரத்திற்கு
காஞ்சிபுரம் போனேன் ..
பெருமள சேவிச்சேன்..

மாமி.. சகானா சுருதி அப்படின்னு ரெட்டைர்களோட
அரங்கேற்ற கச்சேரி சமீபத்லே நடந்ததாம் ..
சுதா, ஜெயஸ்ரீ ,எ எஸ் முரளி ...இவகிட்டே பாட்டு கத்துண்டா..
ரொம்ப நன்னா பாடறாநு சொல்லரா..

ஆனா எங்கே அரங்கேற்றம் நடந்தது
எப்போ நடந்ததுன்னு தெரியல்லை..
பி எஸ் என் தலைமியல நடந்ததாம் ..வயோலின் சுப்ரமணியம் ஜானகி ராமன் ..
எல்லாம் வந்தார்களாம்...


மாமி..ஒரு பழைய செய்தி சொல்லபோறேன் ..
என்னடி..மங்களா..

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் காதலித்தது தான் தெரியுமே எல்லாருக்கும் ..
ஆமாம் ....

ஒரு அல்ப விஷயத்துக்காக அவர்கள் பிரிந்தார்களாம்..
கிருஷ்ண லீலா நாடகம் நடந்து கொண்டு இருந்ததாம்
அதை பார்க்க போக வேண்டாம் என்று கிட்டப்பா கூற
பிடிவாதமாய் சுந்தராம்பா சென்றளாம்..
அதனால் கோபித்து கொண்டு பிரிந்து போன கிட்டப்பா
எவ்ளவோ எடுத்து சொல்லியும் திரும்பி
வரவே இல்லையாம்
கண்ணும் காதும் வைத்து செய்திகள் வர
அவர்களிடையே …இடைவெளி அதிகமானதாம் ...

ஆனால் பாவம் ..வயற்று வலியால் அவரது இருபத்து ஏழாம்
வயதில் கிட்டப்பா இறந்து விட்டார் ..
அப்போது சுந்தராம்பாளுக்கு வயது இருபத்து ஐந்து...

அன்று மாட்டிகொண்டது தான் வெண்ணீறும் வெள்ளை உடையும் துளசிமாலையும் ..

நடிக்கவே மாட்டேன் என்று இருந்த அவர்களை
தீரர் சத்யமூர்த்தி தான் நந்தனார் சரித்திரத்தில் நடிக்க வைத்தாராம்...

மறுபதற்காக அதிகமாக கூறிய ஒரு லக்ஷம் ரூபாயும் கொடுத்து நடிக்க வைத்தராம் ஆசன் தாஸ் என்ற தயாரிப்பாளர் ..

நந்தனாராக அவர்களும் அந்தணராக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரும்
நடித்தார்களாம் ....

மாமி ..
கண்ணன்னிடம் எடுத்து சொல்லடி என்ற அம்புஜம் கிருஷ்ணா பாட்டை
எம் எஸ் பாடி இருக்கார்கள் ..
இங்கே கேளுங்கோ ..
http://www.youtube.com/watch?v=3czKNDh5Q8k

அதே மாதரி ..வந்தேஹம் சாரதம் அப்படின்னு ஒரு பாட்டு
சுவாமி தயானந்த சரஸ்வதி செய்தது ...
யமுனா கல்யாணி ராகத்தில் மகாராஜபுரம் சந்தானம் பாடியது .இங்கே ...
http://www.youtube.com/watch?v=guvFZ6oASTM

மாமி .. உங்களுக்கு டைம் இருந்தா இதும் கேளுங்கோ ..
.வாலாசி வாசி ..நவ ராக வர்ணம் ..
இதை செய்தது பட்னம் சுப்ரமணிய ஐயர் ..அப்படின்னு சொல்லரா
மத்தவா கோட்டவாசல் வெங்கட்ராம ஐயர்நு சொல்லரா ..தெரியல்லை .
கல்யாணராமன் பாடி இருக்கார் ...இங்கே ..
http://www.youtube.com/watch?v=b1K6IHg8auo

ஆமாம் ..நான் பாட்டு சொல்லிக்கும் போது..மோகன்திலே வர வீணா ..அப்புறம் ..
சங்கராபரண வர்ணம் சாமி நின்னு கோரி .. இது எல்லாம் வரிசையா கத்துண்டேன் ..
எங்காத்து மாமாவுக்கு பாட்டெலாம் அவளவாக பரிச்சியமில்லை ..
அதனால பாடரதியே விட்டுட்டேன் ....
நீ சொன்ன பாட்டெலாம் அவர் இல்லாத சமயம் தான் கேட்பேன்
..
நான் பாட்டு கேட்டால் அவர் உடனே டிவியை பெரிசா வச்சுடுவார் …

என்னடி சிரிக்கிறே ...
 16 May 2012 ( copy righted )
மாமி ..
வாடி மங்களா..அம்மாவுக்கு உடம்பு தேவலையா
....பரவாஇல்லை மாமி ..ஜுரம் இல்லை …வெயில் தாக்கம்ம்
சமயபுரம் அம்மனை குள்ர்விக்க அம்மனை சுற்றி
அகழி போல் வெட்டி குளிர்ந்த நீர் நிரப்பி வைத்திருக்கார்கள்..
வெயில் தாக்கம் குறையணும்...

மாமி இன்னிக்கு சனி கிழமை இல்லையா …
காத்தாலே தீக்ஷதரின் ..திவாகரதனுஜம் பாட்டை கேட்டேன்
எப்பவும் செமென்குடி பாடியதை கேட்டு பழகிய என்னக்கு ..
ஒரு மாறுதலுக்காக எஸ் ராஜம் பாடியது கிடைத்தது
இங்கே கேளுங்கள் ….
http://www.youtube.com/watch?v=Fix12ooRXMc
எதுகுல காம்போதி ராகம்
எந்த ராஜம் …
அவர் நடிப்பு ,பாட்டு , பெயிண்ட்ங் போல எல்லா வற்றிலும்
சிறந்து இருந்தார் ...
வீணை பாலச்சந்தருக்கு மூத்தவர்...
பாபநாசம் சிவன் கிட்ட பாட்டு கத்துண்டார் ..
முக்கியமாக...மேளகர்த்தா ராக
சக்கரங்களை பெயிண்ட்ங் செய்து பிரபலமானார் ..
மாமி அவரோட இந்த பெயிண்ட்ங் இங்கே பாருங்கள் ...
http://www.carnaticindia.com/images/dow ... et_new.pdf

மாமி நாளைக்கு எம் டி ராமநாதனுடைய பிறந்த நாள் ...
அவரோட நினைவாக நாளைக்கு ஹம்சத்வனியில்
ஆறு மணிக்கு டி வீ ஜி பாடராரம் …

அவரோட இந்த பட்ட கேளுங்கோ மாமி இன்னிக்கி ..மாருதி பற்றி ..சனிகிழமை ஸ்பெஷல்ஆக..
பாஹி ராம துதா -வசந்தா
-வராளி -ராகத்தில் …
http://www.youtube.com/watch?v=wrzeKQ9YuxA


கத்ரிகோபாலும் கன்னியாகுமரியும் பார்த்தசுவாமி கோவிலிலே

சமீபத்திலே கச்சேரி செய்தாளாம் ..ரொம்ப நன்னா நடந்தது நு சொல்லரா ..

கல்யாண வசந்தம் பாட்டு நடலோலுடை ரொம்பவும் சிறப்பாக அமைத்ததாம் ..




தம்புரா வித்வான் எஸ் வெங்கட்ராமனுக்கு ஹம்சத்வனி அவார்ட் கொடுத்து கௌரவிததராம் போன வாரம் ..


கோலாகலம் ராகத்திலே என்க்கு தெரிந்த ஒரே பாட்டு தியாகராஜரின் மடிலோனா ...

வைகல் -ஞானஸ்கந்தன் பாடி இருக்கார் ...செம்மனகுடி இடம் பாட்டு கத்துண்டாரம்..

இவரிடம் பாட்டு கத்துண்டவா வீ சங்கர நாராயணன் , காயத்ரி கிரிஷ், சிக்கில் குருசரண் ...
எல்லாமே பிரபலமானவர்கள் தான்...
..அபிஷேக் கிருஷ்ணா ..குழந்தை ஆர்டிஸ்ட்
இவர் கிட்ட தான் மூன்று வையசிலேர்ந்து கத்துண்டானம்..
இந்த பாட்டை கேளுங்கோ ...…
http://www.youtube.com/watch?v=5tl5HKdXgsU
மாமா தான் ஊரில் இல்லையே ..எல்லாதயும் கேளுங்கோ ..

மங்களா.. கிண்டலாடி
19 May 2012  ( copy righted )

மாமி ..நாலு நாளா நான் ஸ்ரீரங்கம் போயிருந்தேன் ...

ரங்கன் தரிசனம் நன்றாக இருந்தது ...

மாமி …. இது தெரியுமா உங்களுக்கு

திருவையாறில் இருப்பது போல இங்கும் ஒரு கோவில் இருக்கு ..தியாகராஜருக்கு ...
அங்கே தியாகராஜர் கருவரைலேயே ராமர் சீதா லக்ஷ்மணருடன் இருக்கார் ..
கைகளை கூப்பிய நிலையில் மாருதி …கூடவே பக்தர் கொடுத்த பஞ்சலோக ராமர்சிலையும் …ரொம்பவும்
அழகாக இருக்கு .. பகுள பஞ்சமி ஆராதனை ..திருவையாறு போலவே நடக்கிறது ...

கிருஷ்னனுரும் ஆஞ்சிநேயரும் …ஒற்றுமைகள் …தெர்யுமா மாமி …இருவரும் மலையை தூக்கினார்கள் ...
இருவரும் தூது சென்றார்கள் ...
மாருதிக்கு பிடித்தது ராம நாம சங்கீர்தினம் ..கிருஷ்ணனுக்கு பிடித்தது
கோவிந்த நாம சங்கீர்த்தனம் …..

மகாராஜபுரம் சந்தானம் பாடிய ,தியாகராஜரின் நா ஜீவாதார என்ற -பிலஹரி ராக பாட்டை கேட்டேன் மாமி ..
ஆமாம் மங்களா..ரொம்பநாளா கேட்கணும் என்று ஆசை ...
இங்கே கேளுங்கோ மாமி ….
http://www.youtube.com/watch?v=YPZEDeEVauk
இதே பாட்டை லால்குடியும் நிறைய சங்கதிகளுடன் செய்திருக்காராம் ..கேட்கணும் ...

தியாகராஜர் இந்த பாட்டை பாடியதும் இறந்தவர் ஒருவருக்கு உயிர் திரும்பி வந்ததாம் …
இதற்கு காரணம் பிலஹரி ராகத்திற்கு உயிர் கொடுக்கும் திறன் உள்ளதாம் …நீளமாய் ஒலிக்கும்
‘நா ' ‘ஜி ’ ‘வா ’ என்ற வார்த்தைகளுக்கும் இந்த மாதிரியே உய்விக்கும் திறன் உள்ளதாம் ........
எங்கே படித்தேன் என்று நினைவே இல்லை …


மாமி ..தீக்ஷதரின் கமலாம்பா நவ வாரணத்தை போல அவருடைய ‘அபயாம்பிகா விபுக்தி யும் ...
அம்பாளை பற்றி பாடிய பாடல்கள் …
அதில் ஒரு பாட்டு ‘ஆர்யம் அபாயம்பம் ‘-பைரவி ராகத்தில் …கல்பகம் சுவாமிநாதன் செய்து இருக்கிறார்கள் ...
http://www.youtube.com/watch?v=canPnL_sSTA..
மற்ற பாடல்கள் இங்கே ..
ஸ்ரீ அபாயம்ப விபுக்தி கீர்த்தனை
Website link: http://www.mediafire.com/folder/8o20h7u7ov3te (group of files)



வாட்டி வதக்கிய கத்திரி இன்றுடன் முடிகிறது ….ஆனால் தாக்கம் குறையுமா ..



மாமி …லலிதா தேவியின் புதல்வி ..அவளை விட்டு ப்ரியாதிருபவள் ...
கேட்ட வரங்களை தருபவள் ...பாலாம்பிகை ..அவளை பற்றி தீக்ஷதர் செய்த பாடல் களை
அம்புஜம் வேதாந்தம் பாடி இருக்கிறார்கள் …
பாலம்பிகே -பாஹி--மனோரஞ்சனி ராகத்தில் .. இங்கே கேளுங்கள் …
http://www.youtube.com/watch?v=nTDIIgREs1g


மாமி.. நாளைக்கு எங்காவது போறேளா ..
இல்லை ..மங்களா ..
சரி மாமி ..
28 May 2012  ( copy righted  )
வா மங்களா ..இன்னிக்கு ..வைகாசி விசாகம் ..முருகன் பிறந்த நாள் ..
ஆமாம் மாமி .. இந்த வருஷம் வரும் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பானதாம் ..விசாக
நக்ஷ்ரதுக்கான விர்ச்சுக ராசியை ரிஷபதிலிருக்கும் சூரியனும் குருவும் பார்ப்பது மிகவும்
விசேஷமாம்..விரதம் இருப்பவர்களுக்கு நல்லதாம்..
ஸ்ரீ பாலசுப்ரமணிய -பிலஹரி ராகத்தில் ...மணக்கால் ரங்கராஜன் ..பாடிய சுவாமிமலை முருகனை பற்றி ..
தீக்ஷதர்.பாட்டை இங்கே கேளுங்கோ ..
http://www.youtube.com/watch?v=59kBDIZC-WA
இதையும் கேளுங்கோ மாமி ..
திருப்புகழ் முருகன் ....வைகாசி விசாகம் ஸ்பெஷல் ....
http://www.youtube.com/watch?v=N1E7I_CxNkI
மாமி .. அருணகிரி நாதர் திருபுகழ் பாடல் ..சுவாமி மலை …..
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
.... நாலாறு நாலு பற்று வகையான
.. நாலாரும் ஆக மத்தின் நூலாய ஞான முத்தி
.... நாடோறு[ம்] நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
.... நேராக வாழ்வ தற்குன் அருள்கூர
.. நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
.... நீகாணெ னாவ னைச்சொல் அருள்வாயே
சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
.... சீராக வேயு ரைத்த குருநாதா
.. தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
.... தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
.... காவார்சு வாமி வெற்பின் முருகோனே
.. கார்போலு[ம்] மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
.... காமாரி வாமி பெற்ற பெருமாளே…

இந்த பாட்டை இங்கு …திருத்தணி சுவாமிநாதன் பாடியது
http://www.kaumaram.com/audio_k/tstp0223.html

வேலுமயிலும் என்பது மந்திரம் ..வேலை துதித்தால் தீவினை நீங்கும் ..மயிலை நினைத்தால்..பயம் நீங்கும் ..
...
மாமி ஆறுபடை வீடு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ..ஆனால் ஏழாம் படை வீடு எது தெரியுமா ??

மருத மலை ..இங்கு வைகாசி விசாகத்தன்று நுதெட்டு குட பால் அபிஷேகம் நடக்கும் ..முருகனுக்கு ..

முருகனின் பெருமை ...

கங்கை கரயில் ஒரு முனிவரும் அவரது மகனும் இருந்தார்கள் ..

மகன் தந்தை இடம் சிறந்த கடவுள் யார் என்று கேட்க , முனிவர் முருகன் தான் சிறந்த கடவுள்

என்று கூறினார் ..அன்று முதல் சிறுவனும் முருகனிடம் அபார பக்தி கொண்டவனாய் இருந்தான் ..

ஒரு நாள் முனிவர் ஒரு யாகத்திற்கு பக்கத்துக்கு ஊருக்கு சென்றிந்தார் ...

அப்போது அந்த தேச அரசன் முனிவரை பார்க்க வந்து இருந்தான் ..வந்த காரணத்தை கூறும் படி

சிறுவன் வற்புறுத்தி கேட்க ..அரசன் தான் ஒரு மிருகத்தை வேட்டை யாடும் போது தவறுதலாக

ஒரு மனிதனையும் கொன்று விட்டதாகவும் ..அதனால் ப்ரமஹதி தோஷம் உண்டாய் இருபதாகவும்


அதை நீக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ..

முனிவரின் மகன் அது மிகவும் சுலபம் என்று கூறினான் ..

கங்கை கரையில் சூரியனை நோக்கி நின்று கொண்டு மூன்று முறை முருகா என்று கூறி நீரை தெளித்தால் தோஷம் நீங்கும் என்று கூறினான் ..

மன்னனும் அவ்வாறே செய்ய தோஷமும் நீங்கியது ..

திரும்பி வந்த முனிவரிடம் நடந்ததை கூறியதும் ..அவருக்கு மகன் மேல் மிகுந்த கோபம்
உண்டாயிற்று ..அவர் சிறுவனிடம் ..உனக்கு முருக மந்திரத்தின் பெருமை தெரியவில்லை ..முருகன் நாமத்தை
ஒரு முறை கூறினாலே ஆயிரம் தோஷம் நீங்கும் ..நீ ஏன் மூன்று முறை முருகன் நாமத்தை கூறும்படி கூறினாய் என்று கூறி .....அடுத்த பிறவியில் நீ ஒரு வேடனாய் பிறப்பாய் ..முருகனின் பேராகிய
குஹன் என்னும் பேரை கொண்டு ஒரு படகோட்டியாய் இருப்பாய் ..ஸ்ரீ ராமர் உனக்கு அருள் பாலிக்கும்

போது …உனக்கு முக்தி கிடைக்கும் என்று சாபமிட்டார் ...
இது தான் முருகனின் பெருமை .....
மாமி ..கே பி எஸ் பாடிய முருகன் பாடல்கள் ரொம்பவும் ப்ரிசிதி ஆனவை ..
..ஸ்லோகா ஸ்ரீ சுப்ரமண்யம் .. http://www.youtube.com/watch?v=dvDInrKPn60
அனயம்பட்டி ஆதிசேஷஐயர்- செய்த தனித்திருந்து வாழும் தவ மணியே

http://www.youtube.com/watch?v=X4tyBaGDt5w

ஒரு ஐயப்பா பாட்டு…...
http://www.youtube.com/watch?v=6x8vOThonWQ

ஆடிகொண்டார் ….

http://www.youtube.com/watch?v=bs9SjoVaRHI

முருகன் உடைய அருள் உனக்கு பூராவும் உண்டு மங்களா ...
நமக்கு என்று சொல்லுங்கோ மாமி .....
3 Jun 2012 ( copy righted)
வா மங்களா...
மாமி..இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி..
எம் எஸ் பாடிய விநாயகர் கவசம்..கேளுங்கோ..
இன்னிக்கு கணபதிக்கு பூஜை பண்ணினா சங்கடங்கள்
எல்லாம் தீருமாம்..நமக்கு தான் தலைக்கு மேல இருக்கே..தீரணும்..
ஏன் மாமி சலிச்சுகிரேள்..
ஆமாம்..எல்லாத்லெயும் கொஞ்சம் சருக்கலாக இருக்கு..
கொஞ்சம் மேலேயும் கீழெயும் தான் இருக்கும்..அது தான் வாழ்க்கை..
நான் உங்களுக்கு சொல்லணுமா..எல்லாம் சரியாய் போகும்..சாயிங்காலம்
விநாயகர் கோவிலுக்கு போகலாம்...
 

மாமி..பாம்பன் ஸ்வாமிகளை பற்றி கேள்வி பட்டு இருக்கேளா...
திருவான்மயூரில் அவர் சமாதி இருக்கு...
ஷண்முக கவசம்..பகை கடிதல்..என பல பாடல்களை செய்து இருக்கார்..
அவருக்கு திருவான்மியருரில் குருபூஜை நடக்கிறது..அவர் ஸமாதியில்.
இன்னைக்கு குரு வாரம்..கோவிலுக்கு போய்விட்டு அப்படியே அங்கேயும்
சாய்காலம் போகலாம்..
அவரை பற்றி நிறைய செய்திகள்..
http://murugan.org/bhaktas/pamban_swami.htm

அவர் செய்த பாடல்களை இங்கே கேட்கலாம்..
http://pambanswamigal.net/kan-ket-thirupugal.html

மாமி..பார்தசாரதி சபா ஆதரவில் பார்தசாரதி கோவிலில்
போன வாரம் மூன்று கச்சேரிகள் வஸந்த உற்சவத்தை முன்னிட்டு நடந்தது ..
சிக்கில் குருசரண்,மாம்பலம் சகோதரிகள்,மும்பாய் சகோதரிகள்..
மூன்றுமே ரொம்பவும் நன்றாக இருந்ததாம்..
சிக்கில், நாட்டகுறிஞ்சி வர்ணம், சுத்ததன்யாசியில் கானமூர்தே, யமுந்கல்யாணியில்
நந்தகோபாலா...எல்லாமே நன்றாக இருந்ததாம்..பாமாமாமி சொன்னா...
சித்ரா-விஜயலஷ்மி சகோதரிகளும்..கானமூர்தேயுடன் ஆரம்பித்து காம்போதியில்
ஏலரா கிருஷ்ணா..விஸ்தாரமாக பாடினார்களாம்..
அப்புறம் பாடிய மும்பாய் சகோதரிகளின் பாட்டும் மிகவும் நன்றாக இருந்ததாம்..
பாமா மாமி எப்பொதும் போய்விட்டு வந்து தான் சொல்லுவா..
அந்த மாமிக்கு அதிலெ ஒரு திருப்தி..
பரவாயில்லை விடு மங்களா..
சாயங்காலம் சீக்கிரமா வந்துடு..
சரி..
7 Jun 2012  ( copy righted )

வாடி மங்களா..உன்னை பார்காமல் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது..
எப்பொ வந்தாய் சிதம்பரத்திலே இருந்து...காத்தாலே தான் மாமி...
அப்பாவோட தங்கை பிள்ளை வீடு வாங்கி கிரகபிரவேசம் நடந்தது..
அப்படியே நடராஜர் தரிசனமும் செய்து வந்தேன்...
மாமி கோபாலகிருஷ்ண பாரதி ...தியாகராஜர் காலத்தில் இருந்தார்..
நிறைய நடராஜரை பற்றி பாட்டுகள் செய்து இருக்கார்..
அது தெரியும்..சமீபத்துலே ஏதாவது அவரோட பாட்டைகேட்டையா...
ஆமாம்..வேதவல்லியோட பாட்டு…. ஆடிய பாதத்தை காண் என்ற ஆரபி ராக பாட்டு….

http://www.youtube.com/watch?v=Kodg9plLb94

அர்ஜுனனுக்கு கண்ணன் கீதயை உபதேசித்தார் என்று தெரியும்..
அந்த சமயத்தில் அபிமன்யு இறக்க அர்ஜுனன் கண்ணீர் விட்டு அழுதான்..
அர்ஜுனன் தோளில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது..
நிமிர்ந்து பார்த்த பார்த்திபன் ஏன் கண்ணா நீ அழுகிறாய்..இறந்தது என் மகன்...
ஆமாம்...வாழ்வின் நிலயாமை பற்றி இத்தனை நேரம்
உனக்கு உபதேசித்தேனே அதை நினைத்து அழுகிறேன்...

மங்களா..சித்தர்களில்..தேரையர் என்று ஒருவர்..அகத்தியருடைய சீடர்..
கேள்வி பட்டு இருக்கையா....
சொல்லுங்கோ மாமி...
காசிவரர்மன் என்ற அரசன் தீராத தலைவலியுடன் அகத்தியரிடம்
வந்தான்..தலைக்குள் தேரை ஒன்று இருப்பதை கண்டறிந்தார்..
அகத்தியர்..கபால சிகிச்சை மூலமாக அதை
எடுத்து விடுவதாக அகத்தியர் கூறினார்..தன்னிடம் தலையை பிளக்கவும்
மூடவும் மூலிகைகள் இருப்பதாகவும் கவலை பட தேவைஇல்லை என்றும்
கூறினார்..அரசனும் சரி என்றான்.
தலையை உடைத்ததும் உள்ளேஒரு தேரை இருந்தது..அது உட்பக்கம்
சென்று விடாமல் எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தார்..
அதற்குள் அவரது சீடர் ஒரு கிண்ணத்தில் நீரை வைத்து நீரை சப்தம் செய்தார்..
நீரின் சப்தத்தை கேட்ட தேரை தண்ணீரில் குதித்தது...
அன்று முதல் அகத்தியர் தன் சீடரை தேரையர் என்று கூப்பிட துவங்கினார்..
அவரை பற்றி மற்ற கதைகள் கூட இருக்கு...அது அப்புறம்..
என்னடி ரொம்ப போரா..
அதெல்லாம் இல்ல..
துத்துகுடி பக்கத்தல தென்திருபேரை என்ற ஊரில்
உள்ள கைலாசநாதர் கோவில் பிரசத்தி பெற்றதாம்..
அந்த கோவிலில் உள்ள புத்த பகவானை சேவித்தால்
குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வருமாம்..
மங்களா..உஷா பேரனை கூட்டிகொண்டு போக சொல்லலாம்..
அவன் படிக்காமல் எப்பவும் டிவியிலையும் செல் போன்லையும்
கேம்ஸ் விளையாடி கொண்டே இருக்கானாம்..உஷா வருத்த பட்டாள்..

அவன் மட்டும் இல்ல..எல்லா குழந்தைகளும் அப்படிதான்..இருக்கா..
என்ன செய்யறது...
12 Jun 2012  ( copy righted )
மங்களா..வா..பேசிகொண்டே கோவிலுக்கு போகலாம்..
சரி..
இன்னிக்கு சாரதாபீட சங்கராசாரியார் சென்னை வந்து இருக்கிறார்..
வெங்கட்நாராயணா ரோட்லே தரிசனமாம்..கூட்டத்தை நினைத்தாலே
பயமாய் இருக்கு..எங்கே போக...


மங்களா..இதோ காமாட்சி மாமி வரா..
என்ன மாமி..நானே இன்னிக்கு வர நினைத்தேன்..
உன் நாட்டு பெண்ணுக்கு என்ன உடம்பு..ஜொஸ்ய மாமா சொன்னார்..
அத ஏன் கேக்கற..காத்தால எழும்போதே சிடுசிடுப்பு
சோந்து சோந்து படுத்துக்கரா..கேட்டா தலவலிங்கரா..இத்தனைக்கும்
நான் தான் எல்லா வேலையும் செய்யறேன்..
பிள்ளை கூட்டி போக வீடு கிடைக்கிலேங்கிறான்...
மாமியார் என்று கூட பார்காமல் இன்னிக்கு மத்தியானம்
சிடுசிடுக்கிறாள்...அதான் இப்படயே இங்கே வந்தேன்..
மங்களா நீ அவகிட்ட பேசி பாரேன்..
டாக்டர் கிட்டே பார்த்தேளா..
கீதா மேடம் கிட்டே கேட்டேன்..
எந்த கோளாரும் இல்லை என்கிறாள்..
மாமி..எனக்கு ஒண்ணு தோணறது..
உங்களுக்கும் மாமாவுக்கும் தான் காத்தாலெ காபி குடிக்கும்
பழக்கம் இல்லையே.,,அவ என்ன குடிக்கரா..
எதுவும் இல்லே..
வாங்கோ உங்காத்துக்கு போகலாம்..போகும் போது
அப்படியே ஒரு பாக்கட் காபி பொடியும் வாங்கிண்டு
போகலாம்..
எங்களுக்கு தரும் போது அவளுக்கும் காபி சேர்த்து
கொடுங்கள்..
இதோ..அவளும் வாசலில் நிக்கறா..
உட்காருங்கோ மாமி..மங்களா..
சுமதி இவாள தெரியுமோனோ..
பேசிண்டுஇரு..நான் காபி போட்டு எடுத்துண்டு
வரேன்..
என்னது காபியா..நாம தான் சிலவுன்னு வாங்றதே இல்லையே..
இதோபோட்டு கொண்டு வரேன்..
என்ன சுமி எப்படி இருக்கே..உனக்கு காபி பிடிக்குமா..
ரொம்ப பிடிக்கும் மங்களா...
எங்காதத்லெ நாலஞ்சு தடவை சாப்பிடுவேன்
கண்லே பாத்தே ரொம்ப நாளாச்சு..உடம்பே
என்னவோ பண்றது காபி இல்லாமல்..
என்ன சுமி ..இத சொல்ல வேண்டயது தானே..
சுமதி என்ன சொல்லரா மங்களா..
இந்தாங்கோ..எல்லாரும் எடுத்துகோங்கோ..
என்ன சுமி மூஞ்சியே பிரகாசிக்கறது..
மாமி இனி மேல் உங்காத்திலே காபி பவுடர்
வாங்கி சுமிக்கு காபி கொடுக்கிறேள்...
இனிமேல் டாக்டரும் வேண்டாம்..ஜோஸ்யரும் வேண்டாம்..
என்ன சுமி..
ரொம்ப தாங்ஸ் மங்களா..
போயிட்டுவரோம்...காமாட்சி மாமி..
14 Jun 2012  ( copyrighted )
மாமி....
வா..மங்களா..

பெரிவா சொன்ன கதை ஒன்று ..
அவர் சொன்னதை அவர்சொன்ன மாதிரியே சொல்லரேன்..
நோக்கு தெரியுமோ? அப்பர் சித்திரை மாசம் சதய நக்ஷத்ரத்லதான் முக்தி அடைஞ்சார்....அப்டி முக்தி அடைஞ்ச ஸ்தலம்....திருப்புகலூர். அவர் எப்டி முக்தி அடைஞ்சார் தெரியுமோ?.....ஸ்வாமியோட கர்பக்ருஹத்துக்குள்ள போனவர்தான்! திரும்பி வெளில வரலை!...இது எல்லார்க்கும் தெரிஞ்ச சமாச்சாரம். ஆனா...தெரியாத சமாச்சாரம் ஒண்ணு இருக்கே! சொல்றேன் கேட்டுக்கோ....ஸ்வாமி சிங்கமா வந்து, அப்டி....யே அவரைக் கடிச்சு ஸாப்டுட்டார்!
அப்பர் சொன்னார்...."அப்பனே! எனக்கு வலிக்கறதே!..ன்னார். ஸ்வாமி சொன்னார் "அப்பனே! நீ எனக்கு தித்திப்பா இனிக்கிறாயே!...ன்னாராம்...


மங்களா..இன்னைக்கு சனி பிரதோஷம்..
ஆமாம்..சிவன் நஞ்சை உண்ட சனிக்கிழமை வரும்
பிரதோஷம் ரொம்பவும் மகிமைஆனது..
இன்னைக்கு இந்த ஸோலகத்தை சொன்னால் விசேஷமாம்..
நம: சோமாய ச, ருத்ராய ச, நம: தாம்ராய ச, அருணாய ச
நம: சங்காய ச, பசுபதயௌ ச, நம உக்ராய ச, பீமாய ச,
நமோ அக்ரேவதாய ச, தூரேவதாய ச, நமோ ஹந்த்ரே ச,
ஹனீயசே ச, நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ,
நம ஸ்தாராய, நம: சம்பவே ச, மயோ பவே ச, நம: சங்கராய ச,
மயஸ்கராய ச, நம: சிவாய ச சிவதராய ச..


பாரத போர் நடந்து முடிந்து ஒரு நாள் கண்ணனும் தருமரும்
பேசிக்கொண்டு இருந்தார்கள்..கண்ணா..என்ன இருந்தாலும் துரியோதனன் படு முட்டாள். அவனது முட்டாள்தனத்தாலும் அகம்பாவத்தாலும்தான் இப்படி எல்லாம் நடந்துவிட்டது. அவன் மட்டும் நல்லவனாக இருந்திருந்தால் இன்று எல்லோரும் நலமுடன் வாழ்ந்திருப்போம்..
ஒரு கணமும் யோசிக்காமல் கண்ணன் உடனே சொன்னான்...
"" தருமா... நீ சொன்ன முட்டாள்தனமும் அகம்பாவமும் துரியோதனனிடம் இல்லை... உன்னிடம்தான் இருக்கிறது''.
தருமனுக்கு அதிர்ச்சி. கலங்கிய மனத்துடன் கண்ணனிடம் கேட்டான்...
எப்படிச் சொல்கிறாய் கண்ணா?
கண்ணன் சொன்னான்...
துரியோதனன் எவ்வளவு புத்திசாலியாக இருந்திருந்தால், எனக்கு பதில் என் மாமா சகுனி சூதாட்டத்தில் ஆடுவார் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான். ஆனால் நீ... என்ன செய்தாய்? அதுபோல் எனக்கு பதில் என் கண்ணன் சூதாட்டம் ஆடுவான் என்று சொல்லியிருக்க வேண்டாமோ? நீ என்னை மனதில் நினைத்து அழைத்திருந்தால் நான் வந்திருப்பேனே... உனக்கு இருந்த அகம்பாவத்தால் அன்றோ நீயே சூதாடும்படி ஆனது. அது மட்டும் நடக்காதிருந்தால் குருúக்ஷத்ர யுத்தமே நடந்திருக்காதே....
இதைக் கேட்ட தருமனுக்கு சவுக்கடி பட்டது போல் இருந்தது. தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்...


மாமி..பெரிவா பாதாள லோகத்தை பற்றி சொன்னதை கேளுங்கோ...
பாதாளலோகம்.. மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்

இதயம் பேசுகிறது" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா போயிட்டு வா! இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ? இல்லேன்னா எடுத்துப் பாரு! இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்!" மணியனுக்கோ ஒரே வியப்பு! இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.

"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே! அப்டி வெச்சுக்கோ! பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லாம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு..." மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்!
நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு! சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா...."
அந்த நாட்டில் மணியன் பார்த்தது எழுதியது...
மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான்! அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே "காலண்டரி" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த "மாயன் " புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்!
மாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின்
நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்...
இந்த மஹானுக்கு எப்படி காஞ்சி இருந்து கொண்டே
எல்லாம் தெரிந்தது..ஆச்சரியமாய் இருக்கு மாமி..
அவர் நம்ம காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை...இல்லையா மங்களா..
16 Jun 2012  ( copy righted )
will comtiue.... 

mangalathai kelungal » 20 Jun 2012  (copyrighted)
Image


வா மங்களா..இப்போதான் உன்ன நினச்சேன்..
பெரியவாளை பற்றி ஒரு செய்தி படிச்சேன்..நேரம் ஆச்சு..
அது என்ன..
அப்படியே சொல்லறேன்,,கேளுங்கோ..
சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந ்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர ்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தர்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?
ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினர். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

யாருக்குத்தெரிய போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதாராம் வித்வான்…

கிருஷ்ண மந்திரம் பிறந்த கதை தெரியுமா மாமி...
மந்திரம் தான் தெரியும் ..கதை தெரியாது..மங்களா..
கேளுங்கோ..
கண்ணன் சகாதேவனிடம் சொன்னான்...
ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான். ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.
''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.
கண்ணன் உரக்கச் சிரித்தான்.
''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான்.
''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?
ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.
ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.
''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள்.
பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள்.
நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய்.
பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்!
என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இதெல்லாம் எப்போ படிச்சே..
அப்பப்போ படிக்க வேண்டியது தான்..

மாமி..அன்னிக்கு சொன்னேன் இல்லையா..
தீட்ஷதரின் குரு குஹ விபுக்தி பாட்டை பற்றி..
நாலு பாட்டு கிடைத்தது..

srI-nAthAdi-guruguho-jayati...Raga..mAyAmALavagauLa
DK Pattammal
http://www.youtube.com/watch?v=5IK8jjFl4PQ
mAnasa-guruguha-Anandabhairavi...Rendered by
Shri KV Narayanaswamy
http://www.youtube.com/watch?v=kidOYZruNlA
Sri Guruna Palithosmi-padi..
smt. Kalpagam Swaminathan on Veena
http://www.youtube.com/watch?v=4Pd9_DxNEDQ
Guruguhaya- Raga Sama... Shri. DK Jayaraman...
http://www.youtube.com/watch?v=N_H9ZV_i3MQ

to be continued..
Re: mangalathai kelungal » 23 Jun 2012 12:50
Image

மாமி...இத கேட்டா கண்கள் கலங்கும்..
அதென்ன அப்படி...
கேளுங்கோ…. பரணீதரன் ஆநந்தவிகடனில் எழுதியது..மாமி
மதுரை ஸ்ரீ. மணி ஐயர் அவர்கள் மஹா பெரியவாளின் மிக சிறந்த பக்தர். பெரியவாள், மணி ஐயரை தன் குழந்தையாய் நடத்தி வந்தார்கள். ஐயருக்கோ பெரியவாள், அந்த கபலீஸ்வரரே, அந்த பரமேஸ்வரனே.

ஒரு முறை, மணி ஐயர் தன் கண் பார்வை இழந்த பின், பெரியவாள் முன், பாடிக்கொண்டு இருந்தார். பாடிக்கொண்டு இருக்கும் போது யாரோ மிக அற்புதமாக தாளத்தில் தன்னை தொடர்வதை ஐயர் அவர்கள் உணர்ந்தார். பாட்டு முடிந்தவுடன், வேம்பு ஐயர் அவர்களிடம் தன்னை அற்புத தாளத்தில் தொடர்ந்தது யார் என்று வினவினார். ஸ்ரீ மஹா பெரியவா குறுக்கிட்டு தான் தான் கையில் ஒரு ஆரஞ்சு தோலை கஞ்சிர போல் வைத்து கொண்டு தாளம் போட்டதாக கூறினார். 'நான் தானப்பா தாளம் போட்டது'. திடீரென்று மணி ஐயர் அழ ஆரம்பித்து விட்டார். கண்ணீருடன் 'அப்பனே, கபாலீஸ்வரா, பரமேஸ்வரா, என் பெரியவாளா தாளம் போட்டது? என் பெரியவாளை பார்க்க முடியலியே, எங்கே இருக்கா?'. பெரியவா தன் காருண்யம் நிரம்பிய குரலில் 'இதோ, உன் பக்கத்திலேயே இருக்கேன் அப்பா'. மணி ஐயர் திரும்ப திரும்ப 'அப்பனே, கபாலீஸ்வரா' என்று சொல்லிக்கொண்டு விழுந்து வணங்கினார். பெரியவாள் தன் முத்திரை முறுவலுடன் ஒரு தாய் குழந்தைக்கு ஆசீர்வதிப்பது போல, ஐயர் அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார்.



உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்பித்து எதையும் செய்ய வேண்டுமாம்
இத கேளுங்கோ..
யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள். சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்.
ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை.
""எனக்குப் பசிக்கிறது!''
ராதை பதறினாள்.
""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''
"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''
""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்.
""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''
சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்! அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான். ராதை தொடர்ந்தாள்.
""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!
"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''
""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்''.
""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது. என்னை அதிகம்
புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''
ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.
""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்.
ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள். அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.
""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''
""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''
""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''
""அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''
ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்.
""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும். ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''
""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''
ராதை கலகலவென சிரித்தாள்.
""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''
""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''
ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.
மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.
""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''
""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.
கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''
""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''
""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''
""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.
""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.
கண்ணன் சொல்லலானான்:
""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு
முழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை
அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.
""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்.
""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான் கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது….


ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கிறதாம்! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கிறதாம் !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது ..இது நெல்லையப்பர் கோவிலில் உள்ள அதிசயமாம்….
போகணும் மாமி..
ஆமாம் மங்களா..

மாமி..தீட்ஷதரின் வேணுகோபாலா ருக்மணி லோலா என்ற
குறிஞ்சி ராக பாட்டை எமெல்வி பாடியிருக்கா..
இங்கே கேளுங்கோ.....
http://www.youtube.com/watch?v=XyUmHhRmPok

சித்ரவீணா ரவிகிரன் கீளீவ்லேண்ட் ஆராதனாவில்
வாசித்து இருப்பதை கேளுங்கள் மாமி..
என்ன மாதிரி வாசிப்பு...மகாவித்வான் தான் அவர்...
http://www.youtube.com/user/bagyamananthu41

10 Jul 2012 16:00
என்ன மாமி கொஞ்ச நாளா காணல..வந்து வந்து போனேன்..
ஆமா மங்களா...மச்சினருக்கு திடீரென நெஞ்சு வலி.....ராமசந்திராவுக்கு
தினமும் போகவேண்டியாச்சு....ரெண்டு மாசத்து குள்ள ஆஞ்சியோ பண்ணனுமாம்..
மாமி ஆஞ்சியோ பண்ணாமலே ப்ளாக்கை கரைக்கருத்துக்கு ஒரு மருந்து...
எழுதிக்கோங்கோ....
எலுமிச்சை சாரு.......1கப்
இஞ்சி சாரு..............1கப்
பூண்டு சாரு..............1கப்
ஆப்பிள் வனிகர்........1கப்
இந்த நாலையும் கலந்து மிதமான சூட்டில்
மூன்று ஆக காய்ச்சி ஆறவைக்கவும்...
ஆறினதும், அதனுடன் மூன்று கப் நல்ல தேனை
கலந்து வைத்து கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன்-5 மில்லி
சாப்பிட்டு வந்தால் ப்ளாக் கரைந்து போகுமாம்..
அப்பாக்கு தெரிந்தவர் இதை சாப்பிட்டு நல்ல குணம் தெரிந்ததாம்...
சாப்பிட சொல்லுங்கள்...
சரி..மங்களா..ஆனா அவர் சாப்பிட படுத்துவார்..பூண்டு வாசனை
பிடிக்காது...பாக்கலாம்....


அண்ணாமலைபுரத்திலே சிருங்கேரி பெரியவா
சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்...
நானே போயிட்டு வந்தேன்...
மீனாட்சி காலேஜ்லே அவரோட உபன்யாசத்துக்கும் போனேன்...


மாமி...மனதை உருக்கும் பெரியவாளை பற்றிய செய்தியை கேளுங்கோ...
விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்...

முன்னுரை : மாங்காடு ஸ்தல புராணம்

சிவபெருமானும், தேவியும் கைலாயத்தில் ஒரு நாள் விளையாடும் பொழுதில், தேவியானவர் விளையாட்டாக சிவபெருமானின் கண்ணை மூடி விளையாட, உலகம் முழுதும் இருண்டுவிட்டது!

தாயார் தன் தவறுக்கவருந்தி சிவனின் மன்னிப்பை கோர!, சிவபெருமான் தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்ய பணித்தார்! தேவியாரும் பூலோகம் வந்து, இடது கால் பஞ்சாக்னியில் வைத்து, வலது காலை மடக்கி, இடது கையில் ஜபமாலையுடன் தலை மேல் தூக்கி, கடும் தவம் புரிய தொடங்கினார்.

தவம் முடிந்தபின், தாயார் கைலாயம் செல்லும் பொழுது, அக்னியை அணைக்காமல்

செல்ல, அந்த இடமே அக்னியின் சூட்டில் தவிக்க தொடங்கியது.. பின் அங்கு ஆதி சங்கரர் அங்கு வந்த பொழுது, அக்னியை அணைத்து, அங்கு ஒரு ஸ்ரீ ச்சக்கரம் நிறுவினார்...

மாங்காடு அம்மன் கோவில் புதுப்பணி மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

அது 1952-ஆம் வருஷம்.ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ,

”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு எங்கிட்ட கேட்டார்.

”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன். அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார்.

அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரி யலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன் னார்.

”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.

ஆளுக்கு ஆயிரம் ரூபாபோல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது.

”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா.

கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா. இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா.

இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத் தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.

பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட் டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத் தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.
”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம்.

ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.

1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட்டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.

1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார ் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண் ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை!”- சொல்லும்போதே லக்ஷ்மிநாரா யணனின் குரலில் ஒரு தழுதழுப்பு!...


3ம்தேதி எம்மல்வி யோட பிறந்த நாள் வந்தது..
அவர் பாடிய தோடி ராக 'தாமதமேனோ ஸ்வாமி'
என்ற பாபநாசம் சிவன் பாட்டை கேளுங்கோ....

http://www.youtube.com/watch?v=d7lU2PiYO38

அதை ராகம் தானம் பல்லவி யாக குரு ஜிஎன்பி பாடி இருக்கார்..
அதையும் இங்கே கேளுங்கோ...

http://www.youtube.com/watch?v=dS4TAZBA00E